dimanche 11 août 2013

புலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை சீமான் யாழ்மதிக்கு ஆப்புவைத்தார்

புலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றான் சீமான். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கதாநாயகனாகவும் சீமான் உள்ளான். இவன் இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தடுப்பு முகாம் ஒன்றில் தங்கியிருந்த முன்னாள் பெண் புலி உறுப்பினர் ஒருவரை இந்தியாவுக்கு அழைப்பித்துக்கொண்டான். (இதற்காக செலவிடப்பட்ட பணம் பல லட்சங்கள் என்பது குறிப்பிடத்தக்கது) இவ்வாறு அழைப்பித்துக்கொள்ளப்பட்ட பெண் வேறு யாருமல்ல புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்த தமிழ் செல்வனின் பிரத்தியேகச் செயலாளர் அலெஸ்சின் மனைவி யாழ்விழி ஆகும். இவர் வன்னியில் செயற்பட்டுக்கொண்டிருந்த தமிழ் தேசியக் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழ் செல்வன் மீதான குண்டுத்தாக்குதலில் கூடவே மரணமடைந்திருந்த அலெக்ஸின் மனைவி யாழ்மதியை இந்தியாவிற்கு அழைப்பித்துக் கொண்ட செய்தியை அறிந்த நாம் சீமானின் உள்நோக்கத்தை ஊகங்களின் அடிப்படையில் வெளியிடிருந்தோம். தமிழ் செல்வனின் வெளிநாட்டு முதலீடுகள் யாவற்றையும் அறிந்து வைத்திருந்த ஒரே நபர் அலெக்ஸ் என்றும் அந்த முதலீடுகளை அலக்ஸின் மனைவி அறிந்திருக்க கூடும் என்றும் அலக்ஸின் மனைவியூடாக அச் சொத்துக்களை சூறையாடுவதற்காகவே சீமான் அவளை அழைப்பித்துள்ளான் என்றும் அவ்வாறு சொத்துக்கள் சூறையாடப்பட்ட பின்னர் சீமானால் கசக்கி புளியப்பட்ட யாழ்மதி தூக்கி வீசப்படுவாள் என்பதையும் நாம் தெரிவித்திருந்தோம். 

அன்று எமது செய்தியினால் குளப்பமடைந்த சீமான் குறித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் ஈழத்து விதவைப் பெண்ணொன்றுக்கே தான் வாழ்வு கொடுக்க தீர்மானித்தன் பிரகாரம் அவளை அழைப்பித்துக்கொண்டதாகவும் யாழ்மதி தற்போது தனது தாயாருடன் தங்கியிருப்பதாகவும்; தெரிவித்திருந்தான்;.

ஆனால் நாம் அன்று தெரிவித்திருந்ததன் பிரகாரம் யாழ்மதி தூக்கியெறியப்பட்டு இந்தியாவின் அரசியல்வாதியும் தனவந்தருமான காளிமுத்துவின் மகள் கயல்விழி யைக் கரம்பிடிக்க முடிவுசெய்துள்ளான் சீமான். திருமணம் செப்டம்பர் 8-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் திருமணம் நடக்கிறது. இவ்வாறு அவன் யாழ்மதியை காய்வெட்டி கயல்விழியை கரம்பிடிப்பதற்கு காரணம்வேறு கூறியுள்ளான். கயல்விழிக்குள்ள ஈழ உணர்வுதான் யாழ்மதியை கைவிடத்தோன்றியதாம்..

இது தொடர்பில் அவன் தெரிவித்துள்ள நகைச்சுவைகள் வருமாறு, தங்கள் இருவரிடையேயும் இருக்கும் ஈழ உணர்வுதான் இணைத்துள்ளதாம். ஆவ்வாறாயின் யாழ்மதி ஈழ உணர்வற்றவர் என்று எடுத்துக்கொள்வோமே..

தான் கரம்பிடிக்கவிருக்கும் கயல்விழியின் தந்தை மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்து சிறந்த தமிழ்பேச்சாளரும் தீவிர தமிழ் ஈழ உணர்வாளரும் என்பதுடன் அவரது அரசியல் பயணத்தில் பல்வேறு கூட்டங்களில் தமிழ் ஈழம் குறித்தும், தேசிய தலைவர் பிரபாகரன் குறித்தும் பேசி வந்துள்ளாராம் அவ்வாறாயின் யாழ்மதியின் கணவர் அலெக்ஸ் ஈழ உணவாளர் அல்ல என்றும் அவர் தேசியத் தலைவர் பிரபாகரன் தொடர்பில் பேசவில்லை என்றும் எடுத்துக்கொள்ளுங்களேன். 

கயல்விழிக்கு சிறு வயதில் இருந்தே தமிழ் ஈழ உணர்வு ஏற்பட்டுள்ளதாம் ஈழப் போராட்டம் தொடர்பான செய்திகளையும் தொடர்ந்து அவர் ஆர்வத்துடன் கவனித்து வந்துள்ளாராம் இதனூடாக யாழ்மதிக்கு ஈழ உணர்வு கிடையாது என்றும் அவர் தொலைக்காட்சியில் எழுதி கொடுத்ததை பணத்திற்காக வாசித்தவர் என்றும் கூறுகின்றார் சீமான். 

இதில் வேதனைக்குரிய விடயம் யாதெனின் மரத்தில் விழுத்தவனை மாடேறி மிதித்த கதையாக கணவனை பறிகொடுத்த இலங்கைப்பெண் ஒருத்தி சீமானால் ஏமாற்றப்பட்டிருக்கின்றபோதும் , தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் பேசுவதாக கூறுகின்ற எந்தவொரு ஊடகவோ அன்றில் அமைப்போ இவ்விடத்தை கண்டு கொள்ளவில்லை என்பதாகும். 

Aucun commentaire:

Enregistrer un commentaire