jeudi 1 août 2013

முஸ்லிம்களை ஒரே இரவில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றினர்;நிராகரிக்க வேண்டும் tnaயை;இன நல்லு றவுக்கான ஒன்றியம்

எல்.ரீ.ரீ.யினரின் இன சுத்திகரிப்பிற்கு உறுதுணையாக செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டுமென வவுனியா மாவட்ட இன நல்லு றவுக்கான ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. வடமாகாண முஸ்லிம்களை ஒரே இரவில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றினர் எனவும், எல்.ரீ.ரீ. யினரின் இன சுத்திகரிப்பிற்கு த.தே.கூ உறுதுணையாக செயற்பட்டது என ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு முஸ்லிம்கள் மீது திடீர் அக்கறை ஏற்ப்பட்டுள்ளது எனவும், இந்த அக்கறை தேர்தலை இலக்காக வைத்த கபட நாடகமென அவர் குறிப்பிட்டுள்ளார். எல்ரீரீஈ பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ள நிலையிலும் முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்யும் செயற்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இவ்வாறான நிலையில் நல்லாட்சிக்கான அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது. அவர்களது தீர்மானம் முஸ்லிம் மக்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது. மன்னாரிலும் , முல்லைத்தீவிலும், வவுனியாவிலும் முஸ்லிம்களின் பூர்விக நிலங்களில் அவர்களை மீள குடியேறவிடாது தடுக்கும் செயற்ப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டமிட்டு செயற்படுகிறது. பல முஸ்லிம் கிராமங்கள் தற்போது தமிழ் பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுகின்றன.இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம். இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது முஸ்லிம்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியுமென வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire