samedi 1 décembre 2012

ஸ்ரீடெலோ காரியாலய தாக்குதல் தொடர்பில் கைதான மாணவர்கள் கொழும்பு வருகின்றனர்


ஸ்ரீடெலோ காரியாலத்தின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழகத்தை சேரந்த இரண்டு மாணவர்களையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்புக்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்.  மேற்படி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியதன் பின்னரே அவ்விருவரையும் கொழும்புக்கு அழைத்துவருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீடெலோ காரியாலயத்தின் மீது கடந்த புதன்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை கோப்பாய் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தமை குறிப்பிடத்தக்கதாகு

Aucun commentaire:

Enregistrer un commentaire