குண்டசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“மக்கள் எம்முடன் இருக்கும் வரை, அனைத்துலக மட்டத்தில் மேற்கொள்ளப்படும் எத்தகைய சதித்திட்டங்களின் மூலமும், எனது அரசாங்கத்தை ஒருபோதும் அசைக்க முடியாது.
என்னையும், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு வெளிநாடுகளில் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சில அரசசார்பற்ற நிறுவனங்களும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும், டொலர்களுக்காக விலைபோயுள்ள சிறிலங்காவில் உள்ள சில சக்திகளும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
மக்கள் எம்முடன் இருக்கும்வரை எவரும் எம்மை வீழ்த்த முடியாது.
சிறிலங்கா அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும், மக்கள் ஒரு போதும் அதை அனுமதிக்க மாட்டார்கள்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்
Aucun commentaire:
Enregistrer un commentaire