கடந்த 48 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் 5 மனிதப் படுகொலைகள் பதிவாகியுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடவத்தை - ரன்முத்துகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 46 வயதுடைய நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அக்குரஸ்ஸ - இகலபோபிட்டிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான மரணமொன்று நிகழ்ந்துள்ளது. 57 வயதுடைய நபர் சந்தேகதிற்கிடமான முறையில் மரணமடைந்து சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று பகல் ஹிராந்துருகோட்டே பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் 28 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். தனமல்வில - சூரியவெவ பகுதியில் ஒருவர் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை காலை தோண்டியெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை, கிண்ணையடியை சேர்ந்த அரியதாஸ் சின்னப்பிள்ளை (38வயது) என்ற ஐந்து பிள்ளையின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸர் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் சடலம் மீராவோடை, வண்ணான்டமடு பகுதியில் உள்ள வளவொன்றில் இருந்தே தோண்டியெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் கடந்த 2ஆம் திகதி காணாமல் போயிருந்ததாகவும் அது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.ஏ.றகுமான் முன்னிலையில் தோன்டப்பட்டதுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 09 வருடங்களாக குறித்த பெண் கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் தனிமையில் வசித்துவந்துள்ளதாகவும் பெண்ணின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பிலான விசாரணையை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Aucun commentaire:
Enregistrer un commentaire