மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இன்று சர்வதேச வர்த்தக கண்காட்சி கோலாகலமாக ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தியின் தலைமையில் இடம்பெற்ற இந்த கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித், ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.சார்ள்ஸ, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட 234 படைப்பிரிவின் கட்டளைத்தளபதி கேணல் சுகத்த திலகரட்ன, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இன்று ஆரம்பமாகும் கண்காட்சியானது 13ஆம் 14ஆம் திகதிகளில் தினமும் பிற்பகல் 3.00மணி தொடக்கம் இரவு 11.00மணிவரையில் பார்வையிடக்கூடியவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
எதிர்வரும் 13ஆம் 14ஆம் திகதிகளில் தினமும் பிற்பகல் 3.00மணி தொடக்கம் இரவு 11.00மணிவரையில் பார்வையிடக்கூடியவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறு கைத்தொழிலாளர்கள் மற்றும் கைத்தொழில் துறையில் நுழைய உள்ளவர்களுக்கு மிகுந்த பிரயோசனமுடையதாக இந்த கைத்தொழில் கண்காட்சி நடத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழிலாளர்கள் தமது கைத்தொழில் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சியை தூண்டும் வகையிலான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இதில் பயனடையமுடியும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் பாடசாலை மாணவர்கள, பல்கலைக்கழக மாணவர்கள், விவசாயிகள், ஏனைய துறையினருக்கும் பயன்படும் வகையிலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நாங்கள் இன்னும் பழைய முறைகளில் இல்லாமல் அவற்றினை நவீன முறைக்குள் கொண்டுவரும் வகையில் விவசாயிகளுக்கான அனைத்து சேவைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
பல்வேறு ஏற்றுமதி இறக்கு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைப்புக்களும் கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளதால் மட்டக்களப்பு மாவட்ட கைத்தொழிலாளர்களுக்கு பெரும் நன்மை பயக்கும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி மேலும் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire