இனப்போர் முடிவதற்கு முந்தைய காலகட்டத்திலேயே, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமை இல்லாதநிலையில், இலங்கை தமிழ் சமுதாயத்தின் உள்ளே புரையோடி கிடக்கும் பிரச்சினைகள் மீண்டும் துளிர்விட ஆரம்பிக்கும் என்பது உணரப்பட்டு இருந்தது. இது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தமிழ் அரசியல் தலைமையின் வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகாது. அன்றையதினம் தமிழ் அரசியலில் விடுதலைப் புலிகளின் அடாவடி ஆதிக்கத்தை குறிப்பதாகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
அண்டை நாடான இந்தியாவில் எழுபதுகளில் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. அப்போதைய இந்திய பத்திரிகை துறையின் செயல்பாடு குறித்து விவரித்த பின்னாள் மத்திய அமைச்சர் அத்வானி, ‘அரசானது பத்திரிகை துறை குனிந்து நிற்க வேண்டும் என்று எதிர்பார்த்தது. அவர்களோ, (தன்மானத்தை இழந்து), தரையை தொட்டு, தவழந்து செல்லவும் தாயரானர்கள்’ என்று கூறினார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆளுமையின் கீழ், அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கூட்டமைப்பின் நிலைமையும் அவ்வாறாகவே இருந்தது.
Aucun commentaire:
Enregistrer un commentaire