jeudi 11 octobre 2012

அமைச்சர் ரவூப் ஹக்கீம்!இன்றைய ஆட்சியில் நீதித்துறையின் சுயாதீனம் சிறப்பாகவே பாதுகாக்கப்படுகிறது”


இன்றைய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மை மிகவும் சிறப்பாகவே பாதுகாக்கப்பட்டு வருகின்றது என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். நீதிச் சேவைகள் ஆணைக்குழுவானது நீதியமைச்சின் கீழ் இயங்கவில்லை. அது ஜனாதிபதியின் கீழேயே இயங்கி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire