dimanche 2 décembre 2012

யாழ்ப்பாண, மட்டக்களப்பு, மலையக, கொழும்பு தமிழர் என பிரதேச வேற்றுமை ஏன் ?


தீர்வுக்கு தடையாக நிற்கும் பிரதேசவாதம்!
யாழ்ப்பாண, மட்டக்களப்பு, மலையக, கொழும்பு தமிழர் என பிரதேச வேற்றுமை ஏன் ?
தமிழரை ஒன்றுபடுமாறு முல்லைத்தீவு மக்கள் சந்திப்பில் நாமல் MPயின் கோரிக்கை; அதுவே தனது விருப்பம் எனவும் தெரிவிப்பு
(முல்லைத்தீவு நிருபர்)
இலங்கையில் தமிழர்கள் பிரதேச ரீதியான அடிப்படையில் பிரிந்து நிற்பதே அம்மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் விடயத்தில் பாரிய தடையாக உள்ளதாக தான் நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முல்லைத் தீவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.
தமிழரிடையே பிரதேச ரீதியான வகுப்புவாதப் பிரிவைத் தான் ஒருபோதும் விரும்பவில்லை எனத் தெரிவித்த நாமல் எம்.பி இதற்கு விரைவில் தீர்வுகண்டு முடிவுகட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் மக்கள் பிரதேச ரீதியாக தம்மைப் பிரித்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கு இந்நாட்டை ஆட்சிசெய்த தலைவர்களும், உள்ளூர் அரசியல்வாதிகளும் ஒருவகையில் காரணமாக இருந்துள்ளனர் என்பதுவும் மறைக்கப்படாத உண்மையே.
இந்நிலை இனிமேலும் தொடரக்கூடாது. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ் மக்கள் பேதமில்லாது ஒரு நாட்டு மக்கள் என்றெண்ணிச் செயற்பட முன்வர வேண்டும். இலங்கையில் இனியும் தமிழர்கள் என்றால் அவர்கள் தமிழர்கள்தான். யாழ்ப்பாணத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர், மலையகத் தமிழர், கொழும்புத் தமிழர் என்ற பேதம் இனிமேல் இருக்கக்கூடாது. தமிழர்கள் எப்பகுதியில் வாழ்ந்தாலும் தமிழராக வாழ வேண்டும்.
அதுவே எனது விருப்பம் எனவும் நாமல் எம்.பி.தெரிவித்தார்

Aucun commentaire:

Enregistrer un commentaire