dimanche 2 décembre 2012

அப்பாவி இளைஞர்களை பலிக்கடாவாக்குகிறது. யாழ்.மாநகர சபையில் றெமீடியஸ் முழக்கம் !


யாழ்ப்பாணத்தின் இன்றைய சூழலை அவதானிக்கும் போது 1970 ஆம் ஆண்டு இறுதியிலும் 1980 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்திலும் தமிழ் அரசியல்வாதிகளின் உணர்ச்சி பூர்வமான பேச்சுக்களே அன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இவ்வாறான போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது மட்டுமல்ல இளைஞர்களையும் ஆயுதம் ஏந்திப் போராட வைத்து பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலியாவதற்கு வழிவகுத்தது.
ஆனால் இந்த அரசியல் வாதிகள் தங்களது பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி சுகபோக வாழ்க்கை வாழ வைத்தார்கள். ஆனால் வடக்கு, கிழக்கில் ஏழை எளியவர்கள், வறியவர்கள் கிராமத்தவர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்கள்.
இதே மாதிரியான நிலையை மீண்டும் இப்போது கூட்டமைப்பு அரசியல்வாதிகள் தங்கள் உணர்ச்சிபூர்வமான பேச்சு மூலம் பல்கலைக்கழக மாணவர்களைத் தூண்டி ஒருவன்முறை கலாசாரத்தை உருவாக்கி இளைஞர்களை பலிகொடுக்க முயற்சி செய்கின்றார்கள். இவ் அரசியல் வாதிகளின் குடும்பங்களும் பிள்ளைகளும் யாழ்ப்பாணத்திலோ வடமாகாணத்திலோ இல்லை என்பது முக்கியமான விடயம்

Aucun commentaire:

Enregistrer un commentaire