mercredi 13 mars 2013

அமெரிக்க தூதர்கள் இரண்டு பேரை, 9ம்தேதி, வெனிசுலா அரசு வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக, அமெரிக்கா, வெனிசுலா தூதர்கள் இருவரை, நேற்று முன்தினம் வெளியேற்றியுள்ளது

வாஷிங்டன்: அமெரிக்காவிலிருந்து, வெனிசுலா நாட்டு தூதர்கள், இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெனிசுலா நாட்டின் அதிபராக இருந்த ஹியூகோ சாவேஸ், அமெரிக்காவுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்தார். இதனால், இருநாட்டு உறவில் விரிசல் காணப்பட்டது. கடந்த வாரம், அதிபர் சாவேஸ், புற்றுநோயால் மரணமடைந்தார். இதையடுத்து தற்காலிக அதிபராக நிகோலஸ் மடுரோ பொறுப்பேற்றுள்ளார். அடுத்த மாதம், இங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. உள்நாட்டு அரசியலில், குழப்பம் ஏற்படுத்த திட்டமிடுவதாக கூறி, அமெரிக்க தூதர்கள் இரண்டு பேரை, 9ம்தேதி, வெனிசுலா அரசு வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக, அமெரிக்கா, வெனிசுலா தூதர்கள் இருவரை, நேற்று முன்தினம் வெளியேற்றியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி விக்டோரியா நூலண்ட் குறிப்பிடுகையில், ""வெனிசுலா அரசுடன் பயங்கரவாத ஒழிப்பு, போதை ஒழிப்பு உள்ளிட்ட விஷயங்களில் ஒன்றுப்பட்ட செயல்பட அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், வெனிசுலா அரசின் எண்ணம் வேறுவிதமாக இருக்கிறது. எங்கள் தூதர்களை வெளியேற்றியதால், வெனிசுலா தூதர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்,'' என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire