mercredi 13 mars 2013

கிளிநொச்சி பரிஸ் நகரமாக இல்லாதிருக்கலாம் தமிழர்கள் பாதுகாப்புடன் உள்ளனர் ; ஆபத்தான கடற்பயணம் தேவையில்லை


குடிவரவு மற்றும் குடியுரிமைக்கான எதிர் ஊடகப் பேச்சாளர்
கிளிநொச்சி பரிஸ் நகரமாக இல்லாதிருக்கலாம் ஆனால் நான்கு வருடங்களுக்கு முன் புலிகளின் தலைநகராக முக்கியத்துவம் அடைந்திருந்தது.

புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு வியத்தகு அளவில் குறைந்துள்ளது, 99 பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ளன, சுமார் 26,000 ஹெக்ரயர் நிலப்பரப்பில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன,10,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் 40,000 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளன. எங்கும் வீதி நிர்மாணப் பணிகள் இடம்பெறுகின்றன, ஒரு புதிய மின்சார உப நிலையமொன்று திறக்கப்பட்டுள்ளதுடன் விவசாய உற்பத்திகள் ஐந்து மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ன. நாட்டின் தனி நபர் தலா வருமானம் 50 சதவீத்த்துக்கும் மேலாக அதிகரித்துள்ளன.

ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் அந்நாடுகளில் இவ்வாரான வளர்ச்சி காணப்பட்டிருந்தால் அத்தகைய நாடுகளுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும்.ஆனால் இலங்கையின் வளர்ச்சியை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாமலே இருக்கின்றது.

மக்களுக்கான அதிகமான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மேலும் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. இதேவேளை இராணுவத்தினர் சிவில் சேவைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி துப்பாக்கி ஏந்தித்திரியும் இராணுவத்தினரோ அல்லது சோதனைச்சாவடிகளோ அங்கில்லை.வடமாகாண தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளன.

தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் என்னை வட பகுதிக்கு அழைத்துச்சென்றபோது இடம்பெயர்ந்த மற்றும் மீளக்குடியமர்ந்த மக்கள், தொழில் இல்லாமையையும், தமது காணிகளைப் பெற்றுக் கொள்ளுதல் பற்றியும் கதைத்தனர்.

மேலும் இந்தியாவிலிருந்து திரும்பி வந்த 5,700 இலங்கையர்களின் விபரம் அகதிகளுக்கான ஜக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரினாலும், இடம்பெயர்வுக்கான சர்வதேச நிறுவணத்தினாலும், தமிழ் தேசியக்கூட்டமைப்பினராலும் குறிப்பிட்டவாறு சரியாக இருந்தமை முக்கியமான ஓர் விடயமாகும்.

வட பகுதி மக்களுக்கு அதிக சுதந்திரம் தேவை, அல்லது தேவையில்லை என்று நான் ஆலோசனை கூறவில்லை அதேநேரம் சிம்பாபே நாட்டு முகாபேயினுடைய மோசமான ஆட்சியும் இங்கு இல்லை என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும்.

இலங்கையில் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்கள் இல்லை எனினும் அவர்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வருகிறார்கள். பொருளாதாரம், வாழ்க்கை முறை போன்ற காரணிகளே அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு செல்வதைத் தூண்டுகின்றன.

 வடபகுதியிலுள்ள ஒருவர் தனது பாதுகாப்பைக் கருதியிருந்தால் ஏன் ஒரு மில்லியன் ரூபாவை கொடுத்தது மட்டுமல்லாது 3,000 கி.மீ தூரம் பிரயாணம் செய்து கொக்கோஸ் தீவுகளுக்கு செல்லவேண்டும்?. அருகிலுள்ள இந்தியாவுக்கு செல்லலாமே?.

இந்தியா பல தசாப்தங்களாக அகதிகளுக்கு பாதுகாப்பும் புகலிடமும் வழங்கியுள்ளது. அண்மையில் ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் ஆணையகமானது,அகதிகளை உபசரிப்பதில் ஒரு முன்மாதிரி நாடாக இந்தியாவை பாராட்டியுள்ளது.

படகுகள்மூலம் செல்வோரைத் தடுப்பதற்கு அவர்களை எல்லைப் பகுதிகளில் வைத்தே திருப்பி அனுப்புதல் சரியான நடவடிக்கையாகவிருக்கும்.
இலங்கை கடற்படையினர் மூன்றுபேரில் ஒருவர் என்ற ரீதியில் படகுகள்மூலம் செல்வோரைக் கட்டுப்படுத்தி வருகின்றனர் இதை மூன்று மடங்காக அதிகரிக்கணேடும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இந்த இலக்கை அடைவதற்கு கடற்படை, பொலீஸ், மற்றும் பாதுகாப்பு படை என்பவற்றின் திறன்களை விருத்தி செய்யவேண்டும். இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்துவது தேவையற்ற விடயமாகும். இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிட விரும்பினால் அவுஸ்திரேலியாவின் தலைமையில் கண்ணி வெடிகள் அகற்றுதல், பாடசாலைகள் நிர்மாணித்தல், வீதிகள்,வீடுகள் அமைத்தல், மற்றும் முதலீடுகள் செய்தல் போன்றன இடம்பெறும்.

ஸ்கொட் மொரிஸன் குடிவரவு மற்றும் குடியுரிமைக்கான எதிர் ஊடகப் பெச்சாளர்

Aucun commentaire:

Enregistrer un commentaire