dimanche 24 mars 2013

அச்சுறுத்த முடியாது அமெரிக்கத் தீர்மானம் மூலம் எங்களை

அமெரிக்கத் தீர்மானம் மூலம் எங்களை அச்சுறுத்த முடியாது என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் அமைந்துள்ள குருனேகாலா மாவட்ட ராணுவத் தலைமையகத்தில் அவர் பேசியது:
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம், எங்கள் மீதான தாக்குலாகும். இத்தாக்குதல், எங்களை ஆச்சரியப்படுத்தவில்லை. இந்தத் தாக்குதல்களால் எங்களை அடக்கவோ, தோற்கடிக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது. விடுதலைப்புலிகளின் பிரிவினைவாதப் போரை ஒடுக்குவதற்காக ராணுவத்துக்கு தலைமை தாங்கி நான் வழிநடத்தினேன். அப்போது, வெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலி ஆதரவாளர்களிடம் இருந்தும், இலங்கைக்கு எதிரான சக்திகளிடம் இருந்தும் இது போன்ற தாக்குதல்களை எதிர்பார்த்தேன்.
எனது அரசு மீதான எல்லா குற்றச்சாட்டுகளும் தவறான குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி உள்நோக்கம் கொண்டவையாகும். நார்வே ஆதரவிலான போர் நிறுத்தம் 2008இல் முடிவுக்கு வந்தது. 2009ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த நாட்டின் ஒரு பகுதி ஈழப்பகுதி என்று அடையாளம் காணப்பட்டது. அதற்கு போர் நிறுத்த ஒப்பந்தமானது சிறிது அங்கீகாரமும் அளித்தது.
சர்வதேச சமூகத்தினரால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தத்தை நாம் ரத்து செய்திருக்காவிட்டால், இன்றுள்ள நிலைமை எப்படி உருவாகியிருக்கும்? என்றார் ராஜபட்ச.

Aucun commentaire:

Enregistrer un commentaire