lundi 11 mars 2013

பந்தலுக்கு சீல்;கல்லூரி மாணவர்கள் கைது


சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.மேலும் உண்ணாவிரத பந்த‌லுக்கும் சீல் வைக்கப்பட்டது.
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், அங்கு வாழும் தமிழர்கள் சமஉரிமை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதார ‌தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் அருகே கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நள்ளிரவில் கைது: தொடர்ந்து நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேரை போலீசார் நள்ளிரவி்ல் திடீரென கைது செய்தனர். மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதா­க ­போ­லீ­சார் ­தெரிவித்­துள்­ளனர் .­ மா­ண­வர்­க­­ளுக்­கு ­ஆ­த­­ர­வு ­தெ­ரி­வித்­து ­வந்­த­வர்­க­­ளை­யு­ம் ­போ­லீ­­சார் ­கை­­து ­செய்­த­னர். ஆ­த­ர­வ­ா­ளர்­கள் ­அ­ரு­கில் ­உள்­ள ­ச­மு­தா­ய ­ந­ல ­கூ­டத்த்­தில் ­­­தங்­க ­வைக்­கப்­பட்­­ட­னர். உண்­ணா­வி­ர­தம் ­இ­ரு­ந்­து ­வந்­த ­பந்­த­லுக்­கும் ­போ­லீ­சார் ­சீல் ­வைத்­த­னர்.

போலீஸ் மீது புகார்:நள்ளிரவில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாணவர்கள், பந்தலில் போடப்பட்டிருந்த நாற்காலிகளை போலீசார் அடித்து நொறுக்கியதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

தடுப்பு காவல்: மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தர்களையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாயக்கூடம் ஒன்றில் தங்க‌ வைக்கப்பட்டிருந் தனர். மேலும் மல்லை சத்யா, சினிமா இயக்குனர்கள் ராம்,களஞ்சியம் உட்பட முக்கிய பிரமுகர்கள் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire