lundi 11 mars 2013

சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து வரும் கோரிக்கை எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்களிடம் இருந்தே வருகின்றன .ரொபர்ட் பிளேக்கிடம் சுப்ரமணிய சுவாமி விளக்கம்


Supramaniya Suvamiஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான சக்திகளின் வெற்றியாக அமையலாமென இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணிய சுவாமி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏசியன் ‘ரிபியூன்’ இணையத்தளம் இது பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. “விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை இப்பிரேரணை மீள் ஆராய்வுக்கு உட்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தெற்கு, மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலர் ரொபர்ட் ஓ பிளேக்கைச் சந்தித்த சுப்ரமணிய சுவாமி இது பற்றித் தெரிவித்துள்ளார்.வாஷிங்டனில் இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் சுப்ரமணிய சுவாமி ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான சக்திகளின் வெற்றியாக பிரேரணையைக் கருத முடியாது.அது விடுதலைப் புலிகளை மீள் ஆராய்வுக்கு உட்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் சமர்ப்பிக்கப்பட உள்ள ஒருதலைப்பட்ச பிரேரணை தொடர்பாக ஒபாமா நிர்வாகம் கொழும்புக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டுமென்றும் சுப்ரமணிய சுவாமி கேட்டுள்ளார்.
யுத்தக் குற்றங்கள் தொடர்பாக குற்றவாளிகள் என எவரையும் எக்கட்டத்திலும் இப் பிரேரணையில் குறிப்பிடப்படவில்லை. என்றாலும் நடப்பவற்றை இலங்கை அரசே செய்ய வேண்டுமே ஒழிய சர்வதேச நிறுவனங்கள் அல்ல.சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து வரும் கோரிக்கை எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்களிடம் இருந்தே வருகின்றன. அமெரிக்க அதிகாரிகளுடனான தமது சந்திப்பு பற்றி திருப்தி வெளியிட்ட சுப்ரமணிய சுவாமி மனித உரிமைகள் மீறல் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் இருப்பின் ஜனநாயக ரீதியில் தெளிவாக இலங்கை அரசினாலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சர்வதேச அமைப்புக்கள் நியமித்த நிறுவனங்களால் இதனைச் செய்யமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire