mercredi 6 mars 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் கடிதம் மூலம் கோரிக்கை ;புதைக்குழியில் இருந்த எடுக்கப்பட்ட எலும்புகளை பாதுகாக்குமாறு

மாத்தளை மனித புதைக்குழி எலும்புகளை பாதுகாக்குமாறும்  விசாரணை நடத்துமாறும் கோரிக்கை:-
சாட்சியங்களை அழிப்பதற்கு முன்னர், சுமார் 200 பேருடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கருதப்படும் மாத்தளை மனித புதைக்குழியில் இருந்த எடுக்கப்பட்ட எலும்புகளை பாதுகாக்குமாறும், அது குறித்து விசாரணை நடத்துமாறு ஆசிய சட்ட வள மத்திய நிலையம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த மனித புதைக்குழி, மாத்தளையில் அல்லாது, கிளிநொச்சி அல்லது முல்லைத்தீவில் கண்டுப்பிடிக்கப்பட்டிருந்த இதனை விட சர்வதேச கவனம் செலுத்தப்பட்டிருக்கும் எனவும்  அனைத்து குற்றங்கள் குறித்தும் ஆராய்ந்து பார்ப்பது முக்கியமானது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் பலவந்தமாக காணாமல் போக செய்தல் என்ற பிரச்சினை பல காலங்களுக்கு முன்னர் இருந்து இருந்து வருகிறது. மாத்தளையில் எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளை ஆய்வு செய்த மருத்துவர்கள் அவற்றில் காயங்கள் இருப்பதாகவும் அவை மீட்கப்பட்ட இடம் குற்றச் செயல் ஒன்று இடம்பெற்ற இடமாக இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளதாக ஆசிய நீதி வள மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. 

Aucun commentaire:

Enregistrer un commentaire