mardi 26 mars 2013

ஒருபால் திருமண சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி; பிரான்ஸில்

Homo Sex
ஒருபால் திருமணம் மற்றும் குழந்தைகளை தத்தெடுக்கும் சட்டமூலத்தை தடுக்கும் கடைசி முயற்சியாக ஆயிரக்கணக்கானோர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பேரணி நடத்தியுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரணி கலவரமாக மாறியதை அடுத்து பொலிஸார் தடியடி மேற்கொண்டதோடு கண்ணீர் புகைப் பிரயோகமும் மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லும் சாப்ஸ் எலிசீஸ் வீதிக்கு நுழைய முயன்றபோதே பொலிஸாருடன் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது பலர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஒருபால் திருமணத்தை அங்கீகரிப்பது மற்றும் அவர்கள் குழந்தை தத்தெடுப்பதை ஏற்பது தொடர்பான சட்ட மூலம் பிரான்ஸ் பாராளுமன்ற கீழவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் அடுத்த மாதம் பிரான்ஸ் செனட் சபையில் விவாதிக்கப்படவுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயில் ஹொல்லன்டேவின் சோசலிஸா கட்சிக்கு பாராளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவு உள்ளது.
கருத்துக் கணிப்பு வாக்கெடுப் புகளிலும் ஒருபால் திருமணத்திற்கு பிரான்ஸில் தொடர்ந்து ஆதரவு உள்ளது. எனினும் அண்மைக்காலமாக அதில் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயற்பட்டாளர்கள், ஓய்வு பெற்றோர், மதக்குருக்கள் உட்பட சுமார் 300,000 பேரளவில் பங்கேற்றிருந்ததாக பொலிஸ் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire