vendredi 29 mars 2013

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறன், இலங்கை கொழும்புவில் மிகப் பிரமாண்டமான அளவில் விமான அலுவலக காம்ப்ளெக்ஸ்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறன், இலங்கை கொழும்புவில் மிகப் பிரமாண்டமான அளவில் விமான அலுவலக காம்ப்ளெக்ஸ் ஒன்றை கட்டிவருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கலாநிதி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் உபயோகத்துக்காகவே இந்த காம்ப்ளெக்ஸ் கொழும்புவில் கட்டப்படுகிறது. இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்டப் போரின் போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக கடந்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறனின் பேச்சுக்கு அனைத்து தி.மு.க. உறுப்பினர்களும் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.

எம்.பி. தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், இலங்கை அரசுடன் freedom of the air, 4th freedom ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து நடைபெறுகிறது.

இலங்கைக்கும் தமிழகத்துக்கம் இடையே விமானப் போக்குவரத்தை அதிகரிக்கும் முயற்சியில், ஸ்பைஸ்ஜெட் விமான அலுவலகம் கொழும்புவில் செயல்பட, பிரமாண்டமான கட்டிடம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஸ்பைஸ்ஜெட் டிக்கெட் விற்பனை, மற்றும் மார்க்கெட்டிங் நடைமுறைகள் கொழும்புவில் வொக்ஸ்ஹால் வீதியில் உள்ள ஜெட்விங் அலுவலகத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்றன. புதிய அலுவலக காம்ப்ளெக்ஸ் தயாரானதும், ஸ்பைஸ்ஜெட் சேல்ஸ் அன்டு மார்க்கெட்டிங் நடைமுறைகள் அங்கிருந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ், இலங்கை கொழும்புவில் இருந்து 5th freedom (FOA) லேன்டிங் ரைட்ஸூக்காக விண்ணப்பம் செய்துள்ளது. அதன் அர்த்தம், கொழும்புவில் இருந்து பயணிகளை இந்தியாவுக்கு கொண்டுவராமல், மூன்றாவது நாடு ஒன்றுக்கு கொண்டு செல்ல முடியும்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூக்கு 5th freedom (FOA) லேன்டிங் ரைட்ஸ், இந்தியாவில் உள்ளது. ஒரு பைலாட்ரல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதே லேன்டிங் ரைட்ஸை தமக்கும் கொடுக்குமாறு விண்ணப்பித்துள்ளது கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம்.

ரைட்ஸ் கொடுக்கும் முடிவு, இலங்கை அரசின் கைகளில் உள்ளது.

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (சி.இ.ஓ.) நீல் மில்ஸ், இதற்குமுன் துபாயில் எமிரேஸ்ஸூக்கு சொந்தமான ஃபிளை-துபாயின் சி.எஃப்.ஓ.வாக பணிபுரிந்தவர். இலங்கையின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூம், எமிரேட்ஸின் ஒரு அங்கமாக இருந்தே தற்போது, அதிலிருந்து வெளியேறியுள்ளது.

அந்த வகையில், ஸ்பைஸ் ஜெட் சி.இ.ஓ. நீல் மில்ஸ், இலங்கை சிவில் ஏவியேஷன் துறையுடன் நெருக்கமானவர்.

தற்போது ஏர்-இந்தியாவுக்கு 5th freedom (FOA) லேன்டிங் ரைட்ஸ், லண்டன், நியூயார்க், மற்றும் சில ஏர்போர்ட்டுகளிலும், ஜெட் ஏர்வேஸூக்கு பிரசெல்ஸ், டொரண்டோ, நியூயார்க் ஆகிய ஏர்ப்போர்ட்டுகளிலும் உள்ளன. ஸ்பைஸ் ஜெட், கொழும்புவில் இந்த ரைட்ஸை பெற்றால், அதன் மிடில்-ஈஸ்ட் (சார்ஜா) ஆபரேஷன் தூள் கிளப்பும்.

இலங்கை
அரசு, கலாநிதி மாறனுக்கு சாதகமான முடிவை எடுக்கலாம் என்பதே தற்போதுள்ள நிலை.

Aucun commentaire:

Enregistrer un commentaire