mardi 4 mars 2014

சுப்பர் சிங்கர் திவாகர் ஈழ மண்ணில் இருந்து திரும்பினார்.ரஜினி- அமிதாப்பச்சன் தமிழ்நாட்டில்.விளம்பரத்துக்காக சுமார் 15 கோடி

ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் படத்தின் இசைவெளியீட்டுவிழா மார்ச் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறவிருக்கிறது. அவ்விழாவில் ஜினிகாந்தும், அமிதாப்பச்சனும் கலந்துகொள்ளவுள்ளனர். கோச்சடையான் தமிழ்ப்படத்தின் பாடல்களுடன் கோச்சடையான் தெலுங்குப்படத்தின் பாடல்களும் வெளியிடப்படுகிறது. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் கோச்சடையான் படத்தின் டிரெய்லரும் அவ்விழாவில் வெளியிடப்படுகிறது. இந்த விழாவில், கோச்சடையான் படத்தின் ஸ்பான்ஸரான கார்பன் மொபைலின் புது மாடலும் வெளியிடப்பட உள்ளது. அதோடு, கோச்சடையான் படத்தின் மற்றொரு ஸ்பான்சரான ஹங்காமா ஆன்லைன் மற்றும் மொபைல் கேம்ஸும் வெளியிடப்பட உள்ளது. கோச்சடையான் படம் மக்களை சென்றடைய இதுவரை யாரும் செய்திராத புதிய மற்றும் புதுமையான விளம்பர உத்திகளை கையாளத் திட்டமிடப்பட்டிருக்கிறது. 

கோச்சடையான் படத்தின் ஸ்பான்ஸரான கார்பன் மொபைலுடன் மற்ற ஸ்பான்ஸர்களும் இணைந்து கோச்சடையான் படத்தின் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி விளம்பரத்துக்காக சுமார் 15 கோடி செலவு செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். தென் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள 3650 பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் பெட்ரோல் பங்குகளில் கோச்சடையான் படத்தின் ஹோர்டிங் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட உள்ளன. 

சென்னையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கோச்சடையான் படத்தின் விளம்பர ஹோர்டிங்குகள் வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. கோச்சடையான் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, போஜ்பூரி, மாராட்டி என ஆறு இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் ஆறு மொழிகளில் வெளியிடப்படும் முதல் திரைப்படம் கோச்சடையான். 

Aucun commentaire:

Enregistrer un commentaire