lundi 17 mars 2014

சுதந்திர பிரகடனம் சொத்துக்களும் தேசியமயமாக்கள்

மக்கள் கருத்தறியும் வாக்களிப்பில் கலந்துகொண்டோர்
மக்கள் கருத்தறியும் வாக்களிப்பில் கலந்துகொண்டோர்
க்ரைமியாவில் உள்ள நாடாளுமன்றம், தமது நாடு யுக்ரெய்னில் இருந்து சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்து, ரஷ்யாவில் இணைவதற்கும் விண்ணப்பித்துள்ளது.
அந்த வளைகுடாவில் இருக்கும் அனைத்து யுக்ரெய்னியர்களின் சொத்துக்களும் தேசியமயமாக்கப்படுவதாகவும், அந்தப் பிராந்தியத்தில் இனி யுக்ரெய்னியச் சட்டங்கள் செல்லுபடியாகாது என்றும் அது அறிவித்துள்ளது.
ஐநா மற்றும் சர்வதேச சமூகத்துக்கான ஒரு கோரிக்கை ஆவணத்தில், க்ரைமியாவின் நாடாளுமன்றம், தம்மை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்குமாறு கோரியுள்ளது.
க்ரைமியாவில் ஞாயிறன்று 96 வீதத்துக்கும் அதிகமான மக்கள் வாக்களித்த, ஒரு மக்கள் கருத்தறியும் வாக்களிப்பில், யுக்ரெய்னில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவது என்று பெரும்பாலானோர் வாக்களித்ததை அடுத்து இந்த நடவடிக்கைகள் வந்துள்ளன.
ரஷ்யாவின் ஒரு பகுதியாக இணைவதற்கான முறையான கோரிக்கையை விடுப்பதற்காக க்ரைமியாவின் பிரதமர் மாஸ்கோவுக்குச் சென்றுள்ளார்.
மேற்கு நாடுகள் அதிருப்தி
இதற்கிடையே, க்ரைமியா யுக்ரெய்னில் இருந்து பிரிவதற்கு முடிவெடுத்த பின்னணியில், இது தொடர்பில் ரஷ்யா மீது எப்படியான தடைகளை விதிக்கலாம் என்று ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் பிரஸல்ஸில் கூடுகிறார்கள்.
ஜேர்மனி ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் எரிவாயுவின் அழவைக் குறைக்க வேண்டும் என்று ஜேர்மனியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

க்ரைமிய மக்கள் கருத்தறியும் வாக்களிப்பை சட்ட விரோதமானதாகப் பார்க்கும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அதற்கான பதிலடி குறித்து ஆராய்கின்றன.

Aucun commentaire:

Enregistrer un commentaire