lundi 10 mars 2014

சர்வதேச போர்க் குற்ற விசாரணை கோரிக்கை தானும் முன்வைக்கவில்லை என்னையும் பேச விடவில்லை சுமந்திரன் எம். பி. யுடன் அனந்தி முறுகல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜெனீவாவிற்கு அனுப் பப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப் பினர் சுமந்திரன் எந்த வொரு சந்திப் பிலும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர் பில் கோரிக்கை களை முன்வைக்க வில்லை. என்னை யும் எதுவும் பேச அனுமதிக்க வில்லை என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள் ளார்.ஜெனீவா சென்று இறங்கியதுமே தேசியப் பட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நான் விடுதலைப் புலி களது முக்கிய போராளியான எழிலனின் மனைவி என்பதால் என்னையும் சர்வதேச பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் போராளியாகவே பார்ப்பார்களென தெரிவித்ததுடன். என்னை ஏதும் பேச வேண்டாமெனவும் தானே எல்லாவற் றினையும் பேசுவதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வாறு ஒரு நிகழ்ச்சி நிரலில் அவர் என்னை அங்கு அழைத்து சென்றிருப்பார் என முன்கூட்டியே தெரிந்திருந்தால் நான் நிச்சயமாக அங்கு சென்றிருக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார். வெறுமனே வேடிக்கை பார்க்கும் நபராக நான் இருந்தேன். குறுக்கிட்டு அங்கு பேசியிருக்க முடியுமாயினும், ராஜதந்திரிகளிடையே கெளரவத்தினை மதித்து தான் பேசாதிருந்ததாகவும் அனந்தி தெரிவித்தார். எது எவ்வாறிருப்பினும் இப்போது சர்வதேச விசாரணை என்பது செல்லாக்காசாகிவிட்டது. சுமந்திரன் எம். பி. ஒரு பிரபலமான சட்டத்தரணி, அவரைக் கேள்விகேட்க அனந்திக்கு அருகதை கிடையாது என தமிழ்க் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் இது தொடர்பாகக் கருத்துக் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire