samedi 15 mars 2014

தேர்தல் தமிழர்களின் நலனுக்காக யாரும் உழைக்கப் போவதில்லை;மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் பற்றி நடிகர் மன்சூர் அலிகான் அளித்துள்ள பேட்டியில், இந்த பாராளுமன்ற தேர்தலில், மக்களுக்கு அதிக ஆர்வம் இல்லை. எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கோடி கோடியாக பணம் உள்ளவர்கள் மட்டுமே அரசியல் நடத்த முடியும் என்கிற நிலை உள்ளது.
சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக சிலர் அரசியலுக்கு வருகிறார்கள். இந்த மண்ணின் மைந்தர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யாரும் வரவில்லை.
தமிழ்நாட்டில் இருந்து 40 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி போவார்கள். அவர்களில், 5 பேர் மந்திரிகளாகி விடுவார்கள். அந்த ஐந்து பேரும் இதற்கு முன்னால் மந்திரிகளாக இருந்தவர்கள் என்ன செய்தார்களோ, அதையே தான் இவர்களும் செய்வார்கள்.
தமிழர்களின் நலனுக்காக யாரும் உழைக்கப் போவதில்லை. இந்த தேர்தலில், சில நடிகர்-நடிகைகள் தேர்தல் பிரசாரத்துக்கு போகிறார்கள். சில நடிகர்-நடிகைகள் அரசியல் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள். எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்பதை வரவேற்கிறேன்.
மேலும் நக்மா, நமீதா, சோனா மூன்று பேருக்கும் வாழ்த்துகள். நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வருகிறார்கள். முதலில் மிகுந்த கட்டுப்பாட்டோடு கட்சி ஆரம்பிக்கிறார்கள். போகப்போக அந்த கட்சிக்குள்ளும் குடும்ப அரசியல் நுழைந்து விடுகிறது. அப்புறம் ஊழல் என்கிறார்கள். ஊழலை ஒழிப்போம் என்கிறார்கள். அந்த ஊழல் எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை.
என் மீது நம்பிக்கை வைத்து சிறந்த இயக்கத்தில் இருந்து அழைப்பு வந்தால், நான் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire