samedi 8 mars 2014

தமிழருக்காக வெட்டிப் புடுங்கப்போறான் எண்டு றீல் விட்டதுக்கு முகத்தில ஒரேயடியாக கரியைப் பூயசிது அமெரிக்காவின் பிரேரணை.

இலங்கை அரசின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில்அமெரிக்காவின் பிரேரணை அமைந்துள்ளது' எண்டு சுரேஸ் பிரேமச்சந்திரன் அழுதுவடியிறார்.
 தமிழர்களை அமெரிக்கா ஏமாற்றி விட்டது' எண்டு புலம்புறார் மனோ கணேசன்.
 இலங்கைக்கு எதிரான பிரேரணை ஏமாற்றமளிக்கிறது' எண்டு கண்ணீர் வடிக்கிறார் கருணாநிதி.
 ஜெனிவாத் தீர்மான நகல் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் முகத்தில் விழுந்த அறை' எண்டு கோவிக்கிறது பிரிட்டிஷ் தமிழ் போரம்.இதையெல்லாம் கேட்டால் எனக்குச் சிரிப்புத்தான் வருது. எனக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் சிரிப்புத்தான் வரும். ஏனெண்டால், ஜெனிவா எண்டால் ஏதோ நீதியான – நடுநிலைமையான – சரியான  தீர்ப்பை வழங்கக் கூடிய இடம் எண்டு ஒரு பேய்த்தனமான நம்பிக்கையைச் சனங்களுக்கு ஊட்டி வளர்த்ததுக்கும்,  
 அமெரிக்காக்காரன் ஏதோ இவையின்ரை சித்தப்பன் பெரியப்பன் எண்ட மாதிரி தங்களுக்காக – தமிழருக்காக வெட்டிப் புடுங்கப்போறான் எண்டு றீல் விட்டதுக்கும்,
 இந்த முறை ஜெனிவாத் தீர்மானத்தோட இலங்கை அரசாங்கத்தின்ரை கதை – மகிந்தரின்ரை சரித்திரம் எல்லாம் முடிஞ்சிடும் எண்டு சொல்லிக் கொண்டும் நம்பிக்கொண்டும் இருந்ததுக்குமாகச் சேர்த்து,
 இவையின்ரை முகத்தில ஒரேயடியாகக் கரியைப் பூசிப்போட்டுது அமெரிக்காவின் பிரேரணை.
 உண்மையில இவைக்கு இப்பிடியெல்லாம் நடக்கும் எண்டு தெரியாதா? அப்படித் தெரியாதிருந்தால், இவைக்கும் அரசியலுக்கும் சம்மந்தமேயில்லை எண்டுதான் சொல்வேன்.
 சாதாரணமான ஆட்களுக்கே ஜெனிவாத் தீர்மானம் எப்பிடியிருக்கும் எண்டும்  அமெரிக்காவின்ரை அறிக்கை எப்பிடியிருக்கும் எண்டும் தெரியும்.
 அவர்களே மரங்களுக்குக் கீழ இருந்தும் மடத்தடியில இருந்தும் இதைப்பற்றியெல்லாம் வலு தெளிவாகக் கதைச்சார்கள்.
 ஆனால், இவ்வளவு காலமாக அரசியலில இருக்கிற கருணாநிதிக்கும் சுரேசுக்கும் மனோ கணேசனுக்கும் ஜெனிவா, ஐ.நா, அமெரிக்கா எண்டதெல்லாம் என்ன செய்யும்? எப்பிடி நடந்து கொள்ளும்? ஆருக்காகப் பாடுபடும்? எண்டு தெரியாதெண்டால்... அது சுத்தமான ஏமாத்தில்லாமல் வேற எப்பிடி இருக்கும்?
 அப்பிடி இதுகளைப் பற்றியெல்லாம் உண்மையிலயே தெரியாது எண்டால், இவையள நம்பியா தமிழர்கள் தங்கட அரசியல் எதிர்காலத்தை உருவாக்கப்போகினம்?
இதில உள்ள வேடிக்கை என்ன எண்டால், இவையின்ரை விசுவாசிகள் இவை சொல்லிற கதைகளை எல்லாம் நம்பி, ஜெனிவாத் தீர்மானமும் அமெரிக்க அறிக்கையும் ஏதோ பென்னாம் பெரிய அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டு வரப்போகுது எண்டு ஊர் ஊராக அடிச்ச மேளம் கொஞ்ச நஞ்சமல்ல.இப்ப இவையும் வாயைப் பிளக்க அவையும் அண்ணாந்து வாயைப் பிளந்து கொண்டிருக்கினம்.
 போதாக்குறைக்கு ஜெனிவா அற்புதத்துக்காகக் காத்திருந்த யாழ்ப்பாணத்தின் 'செத்தவீட்டுப் பேப்பரும்' இப்ப வாயைப் பிளந்து கொண்டிருக்கு.
 இதில பெரிய கொடுமை என்னெண்டால், தாங்கள்தான் மூடர்கள் எண்டதும் காணாமல், சனங்களையுமெல்லோ முட்டாள்களாக ஆக்கப்பாக்கிறாங்கள்.
 அப்பிடித்தான் ஒரு மண்ணாங்கட்டியும் மசிரும் தெரியாதெண்டால், வாயைப் பொத்திக் கொண்டும் கையைக் கட்டிக் கொண்டும் இருக்க வேண்டியதுதானே!
 பிறகேன், வீணாக ஏமாத்து, சுத்துமாத்து, பம்மாத்துக் கதைகளை எல்லாம் சொல்லிச் சனங்களைப் பேய்க்காட்ட வேணும்?
 உண்மை என்னெண்டால், இவங்களுக்கு ஒண்டும் தெரியாதெண்டோ ஒண்டும் விளங்காதெண்டோ இல்லை. ஆனால். சனங்களை வைச்சுப் பிழைக்கிறதே இவங்களின் வேலை.
 அதனால எந்தக் கூச்ச நாச்சமும் இல்லாமல் தாராளமாகப் பொய்பேசிறாங்கள். நாசமறுப்பாரை எப்ப பார்த்தாலும்  வாய்க்கு வாய் பொய்யும் புரட்டும் பம்மாத்தும்தான். 
 இப்ப தாங்கள் சனங்களை ஏமாத்தேல்ல எண்டதைக் காட்டத்தான் ஐ.நா ஏமாத்திப்போட்டுது, அமெரிக்கா ஏமாத்திப் போட்டுது எண்ட புலுடாக்கள் எல்லாம்.ஐ.நாவும் அமெரிக்காவும் எந்தப் புண்ணியத்தையும் பாவப்பட்ட சனங்களுக்காகச் செய்ததாகச் சரித்திரமே இல்லை.ஆனால், தமிழ்ச் சனங்களைப் பேய்க்காட்டி இது ரண்டையும் நம்புங்கோ நம்புங்கோ எண்டு என்னமாதிரி நிண்டாங்கள்.திண்ட வீட்டுக்கு ரண்டகம் செய்யிற மாதிரி சொந்தச் சனங்களுக்கும் சகோதரங்களுக்கும் அநியாயம் செய்யிறதை எப்பிடித்தான் மன்னிக்கிறது?
 உண்மையில இந்தக் குமாரவடிவேலு குருபரன் எண்ட சின்னப்பெடியனுக்கு விளங்கின அளவுக்கு, அந்தப் பெடியன் சொல்லிற அளவுக்கு தமிழர்கள் தூக்கித் தலையில வைச்சிருக்கிற இந்தப்  பென்னாம் பெரிய தலைவர்களுக்கு ஒரு மண்ணும் விளங்கவும் இல்லை. உண்மையாக நடக்கவும் தெரியேல்ல.
 சனங்களை அங்க இங்க எண்டு அலைய வைக்கிறதிலயும் பேய்க்காட்டிப் பேய்க்காட்டிக் காலத்தை வீணடிக்கிறதிலயும் கருணாநிதிக்கும் சுரேசுக்கும் மனோகணேசனுக்கும் நிகர் இந்த ஈரேழு உலகத்திலயும் வேற ஆரும் இல்லையப்பா!                                   - வடபுலத்தான்

Aucun commentaire:

Enregistrer un commentaire