mercredi 26 mars 2014

உலகம் முழுவதும் 7மில்லியன் பேர் உயிரிழப்பு காற்று மாசடைதல் காரணமாக

காற்று மாசுபாடுதான் உலகின் மிகப்பெரிய அழிவிற்கான அச்சுறுத்தல்: உலக சுகாதார அமைப்புகாற்று மாசடைதலே உலகின் சுகாதாரத்திற்கு ஒரே பெரிய அச்சுறுத்தல் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2012 ஆண்டில் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்கள் காற்று மாசுபாட்டால் இறந்துள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலான மரணங்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள ஏழை, நடுத்தர வருமான நாடுகளில் ஏற்பட்டுள்ளன. வீடுகளின் உட்புறச் சமையல் அறைகளில் சமையல் நெருப்புடன் வேலை செய்யவேண்டியிருக்கும் பெண்களும், அவர்களின் குழந்தைகளும் அளவிற்கு மீறி பாதிக்கப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனா போன்ற அதிவேகமாக தொழில் வளர்ச்சி கண்டுவரும் நாடுகளில் இந்த வெளிப்புற காற்று மாசுபாடு ஒரு முக்கிய பிரச்சனை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வீடுகளில் இருக்கும் லட்சக்கணக்கானவர்களை காப்பாற்ற சுத்தமான, குறைந்த தொழில்நுட்ப மிகுந்த அடுப்புகள் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் வெளிப்புற காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் கொள்கைகளை அரசாங்கங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire