இலங்கையில் நடந்த போர் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதே ஒழிய தமிழர்களை இலக்கு வைத்து நடந்தது அல்ல என்று அதிபர் ராஜபக்சே தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் தென் மாவட்ட மான காலியில் புதன்கிழமை நடந்த அரசியல் மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியதாவது:
தமிழர்களை எதிர்த்து நாங்கள் போர் தொடுக்கவில்லை. கொடிய பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்த்தே நாங்கள் போர் தொடுத் தோம். எமது போர் தமிழர்களுக்கு எதிரானது என்றால் நாட்டின் தென்பகுதியில் சிங்களர்களுடன் இரண்டறக் கலந்து தமிழர்கள் எப்படி மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் நிம்மதியான வாழ்க்கையை நடத்த முடியும்.
இலங்கையில் வாழும் சிறுபான்மை இனத்தவரை குறிப் பாக முஸ்லிம்களை தாக்குவோர் தண்டனைக்கு உள்ளாகாமல் தப்பிக்கலாம் என்கிற கலாசாரத்தை இலங்கை அரசு ஊக்குவிப்பதாக புகார் வைக்கிறார்கள். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இவை. நாடு முழுவதுமே மத நல்லிணக்கமும் நட்புறவும் நிலவுவதை காணலாம்.
இலங்கையில் மத நல்லிணக் கம் இல்லை என காட்டுகின்ற முயற்சியில் சில அரசு சாரா தொண்டுநிறுவனங்கள் அன்னிய நாடுகளின் உதவியுடன் செயல் படுகின்றன. இது எங்க ளுக்கு தெரியும். இவை எல்லாம் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டம் கூடியுள்ள நிலையில் இலங்கை அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும் என்றார் ராஜபக்சே.
சில தினங்களுக்கு முன் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரம சிங்கவுடன் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க சந்தித்துப் பேசியதை மனதில் கொண்டே ராஜபக்சே இந்த குற்றச் சாட்டை வைப்பதாக தெரிகிறது. மனித உரிமை மீறல்கள் பிரச்சினையில் முன்னேற்றம் காட்டாதது மற்றும் தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாதது ஆகிய பிரச்சினைகளில் இலங்கையை கண்டித்து ஜெனிவா வில் இந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இலங்கையில் நிகழ்வதாக கூறப்படும் மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல் விவகாரமும் விவாதிக்கப்பட உள்ளது.
2009ல் நடந்த இறுதி கட்டப் போரின்போது இலங்கை நடத்திய மனித உரிமை மீறல் கள், போர்க்குற்றங்கள் தொடர் பாக சர்வதேச விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க அமெரிக் காவின் ஆதரவில் கொண்டுவரப் படும் இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.