vendredi 21 mars 2014

இலங்கையில் சிறு போக நெல் வேளாண்மை செய்கை பாதிக்கப்படும் அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  பருவ மழை குறைவு காரணமாக  நீர்ப்பாயச்சலுக்குரிய  சிறு போக நெல் வேளாண்மை  செய்கை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் அச்சமும் கவலையும் வெளியிட்டுள்ளார்கள்
வழமையாக சிறுபோக நெல் வேளாண்மை செய்கக்குரிய காணியில் இந்த ஆண்டு 29 சத வீதம் தான் செய்கை பண்ணுவதற்கு நீர்பாசன தினைக்களத்தினால் அனுமதியளிக்கப்பாட்டுள்ளதாக கமநல சேவைகள் தினைக்களம் கூறுகின்றது 
பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பெய்ய வேண்டிய பருவ மழை   பிரதேசங்களில் இன்னமும்  பெய்யாத நிலையில்  அநேகமான பிரதேசங்களில் வரட்சியான நிலை காணப்படுகின்றது.
 
மழை இல்லாத நிலையில் விவசாய நீர்ப்பாசன குளங்களிலும் நீர்த் தேக்கங்களிலும் நீர் மட்டமும் குறைந்து வருகின்றது.
நாட்டின் தற்போதைய வரட்சி நிலையை நீக்க  அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் மழை வேண்டி பிரதர்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன.
 
இந்த ஆண்டுக்கான பருவ  மழை குறைவு காரணமாக நீர்பாசன அதாவது சிறு போக நெல் வேளாண்மை செய்கையை மட்டுப்படுத்துமாறு  நிர்பாசன இலாகாவினால் விவசாயிகளுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தங்களது  நெல் வேளாண்மை செய்கையில் விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 தொடக்கம் 15 சத வீத ஏக்கரில்  விவசாயிகளுக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றார்கள்.
இம் மாவட்டத்திலுள்ள சிறு  நெல் வேளாண்மை செய்கைக்கு என அடையாளம் காணப்பட்டுள்ள 60 ஆயிரம் ஏக்கரில் இந்த ஆண்டு 17ஆயிரத்து 500 ஏக்கரிலே  நெல் வேளாண்மை செய்கைக்கு உத்தேசிக்கனப்பட்டுள்ளது

Aucun commentaire:

Enregistrer un commentaire