samedi 15 mars 2014

தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியாவில் ஆர்பாட்டம்…


பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் நேற்று முன்தினம் (13) கிளிநொச்சி, தர்மபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரியை விடுதலை செய்யக்கோரி வவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டம் வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக மதியம் 12 மணிக்கு இடம்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதாரலிங்கம், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், ம.தியாகராஜா, சி.சிவமோகன், ஜனநாய மக்களின் முன்னணியின் ஊடக செயலாளரும் கொழும்பு மாநாகர சபை உறுப்பினருமான பாஸ்கரா, காணாமல் போனோரை கண்டறியும் குழுவின் தலைவர் எம்.பிரிட்ரிகோ உட்பட அதன் அங்கத்தவர்களும் பிரஜைகளின் குழு உறுப்பினர்கள் காணாமல் போனோரின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜெயக்குமாரியை விடுதலை செய், சட்டவிரோத கைதுகளை நிறுத்து, பழிவாங்கலை நிறுத்து, காணாமல் போனோருக்கு பதில் கூறு, இராணுவமே வெளியேறு, எங்கள் பிள்ளைகள் எங்கே போன்ற வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்ததுடன் கேசங்களையும் எழுப்பியிருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனோரின் பெற்றோர்கள் ஆக்கேராசமாக கோசங்களை எழுப்பியிருந்த நிலையில் தாயொருவர் மயங்கி வீழ்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire