mardi 11 mars 2014

துருக்கியில் மீண்டும் பல நகரங்களில் கலவரம்

புகைப்படம்: துருக்கியில் மீண்டும் பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது. ஆயிரக் கணக்கான அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும், கலகத் தடுப்பு போலீசாருக்கும் இடையில் மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர், அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை பொலிஸ் அடக்கிய நேரம், கண்ணீர்ப் புகைக் குண்டுகளால் பாதிக்கப் பட்டு கோமாவில் கிடந்த 15 வயது சிறுவன் ஒருவன் மரணம் அடைந்துள்ளான். அவனது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களில் சிலர், அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அந்த செய்தி காட்டுத் தீயாக பரவியதால், இஸ்தான்புல், அங்காரா, இஸ்மீர், அடானா ஆகிய பெரு நகரங்களில், மக்களின் தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.துருக்கியில் மீண்டும் பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது. ஆயிரக் கணக்கான அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும், கலகத் தடுப்பு போலீசாருக்கும் இடையில் மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர், அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை பொலிஸ் அடக்கிய நேரம், கண்ணீர்ப் புகைக் குண்டுகளால் பாதிக்கப் பட்டு கோமாவில் கிடந்த 15 வயது சிறுவன் ஒருவன் மரணம் அடைந்துள்ளான். அவனது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களில் சிலர், அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அந்த செய்தி காட்டுத் தீயாக பரவியதால், இஸ்தான்புல், அங்காரா, இஸ்மீர், அடானா ஆகிய பெரு நகரங்களில், மக்களின் தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.                                                ;கலையரசன்

Aucun commentaire:

Enregistrer un commentaire