jeudi 20 mars 2014

இலங்கை தமிழ் மொழி மூலம் தமிழ் யுவதிகளுக்கான இராணுவ பயிற்சிகள் ஆரம்பம்

இலங்கை இராணுவத்தின் மகளிர் பிரிவில் புதிதாக இணைந்து கொண்ட தமிழ் யுவதிகளுக்கான ஆரம்ப கட்ட பயிற்சிகள் முல்லைத்தீவில் ஆரம்பமானது. இப் பிரிவில் முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து இணைத்துக்கொள்ளப்பட்ட 29 யுவதிகள் உள்ளடங்குகின்றனர்.
இப் பயிற்சியின் அரம்பகட்ட நடவடிக்கைகள் கடந்த திங்கட்கிழமை (மார்.17) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்தலைமையகத்தில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த பயிற்சி நடவடிக்கைகளானது 16 வாரங்கள் இடம்பெறவுள்ளதுடன் இராணுவத்தின் 2 அவது பெண்கள் படையணி பயிற்றுவிப்பாளர்களால் முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கான அனைத்துப் பயிற்சிகளும் தமிழ் மொழிமுலமே நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்.பயிற்சியின் பின்னர் இவர்கள் தமது சகாக்களுடன் இணைந்து நாட்டுக்காக கடமையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் 2012 ஆம் ஆண்டில் கிளிநொச்சி முல்லைத்தீவைச் சேர்ந்த 6 ஆம் பெண்கள் படையணிக்கு 109 தமிழ் யுவதிகள் இணைந்து கொண்டனர். அத்துடன் அவர்கள் பயிற்சியின் பின்னர் கடந்த மார்ச் 2013 ஆம் ஆண்டு தேசிய சேவையில் இணைந்து கொண்டனர். அன்றிலிருந்து வடக்கு, கிழக்கிலிந்து தமிழ் யுவதிகள் இராணுவத்தில் ணைந்துள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire