mardi 11 mars 2014

ஜெனிவா தமிழர்கள் போராட்டம் பள்ளிவாசல், தேவாலயம், கோயில் ஆகியன உடைப்புக்கு எதிராகவே அமைந்தது

தமிழர்கள் தனது விடுதலை உரிமைகளைப்பெற போராட வேண்டிய அவசியத்தை தெளிவாக மீண்டும் ஜெனிவா தீர்மானம் மூலம் உலகநாடுகள் எமக்கு உணர்தியுள்ளன. இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச்செயலரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான சி.பாஸ்க்கரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பள்ளிவாசல், தேவாலயம், கோயில் ஆகியன உடைப்புக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் மூலமே அந்தப் பிரச்சனைகளும் ஜெனிவாவில் ஒலித்தது.இதேபோல் தமிழ் அரசியல் தலைவர்களால் நடாத்தப்பட்ட போராட்டங்களால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் உலகுக்கு வெளிக்கொண்டுவரப்படுகிறது.அதற்காக உரிமைக்காக குரல் கொடுக்கும் பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும்.நாம் பலம் பொருந்தி ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே எமது விடிவை நோக்கி நகர முடியும்.
இவ்வாறு இல்லையேல் எமது உரிமைக்கான குரல் தோல்வியுடன் நகர்வதை தடுக்க முடியாமல் போய் விடும்.அரசு.அரசு சார்பான கட்சிகள் பலம் பெறுமானால் தமிழர்களின் விடிவு பகல் கனவாக தான் இருக்கும். வடக்கு-கிழக்கு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வெற்றித்தீர்ப்பின் வெளிப்பாடே உலகநாடுகள் எம்மை திரும்பி பார்க்க வைத்தது என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire