mardi 11 mars 2014

ஆராயவேண்டும் அரசாங்கம்;சனல்4 காணொளிக்கும் சிறிகொத்தாவில் காண்பிக்கப்பட்ட காணொளிக்கும் தொடர்பு உள்ளதா என

சனர் 4 வினால் வெளியிடப்பட்டுள்ள புதிய காணொளிக்கும் இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநட்டின் போது சிறிகொத்தாவில் இடம்பெற்ற கண்காட்சியில் காண்பிக்கப்பட்ட காணொளிக்கும் தொடர்பு உள்ளதா என முதலில் ஆராயப்பட வேண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
 
ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 
 
புதிய போர்க்குற்ற ஆதார ஆவண காணொளியொன்றினை சனல் - 4 வெளியிட்டுள்ளது.
இந்த காணொளி இறந்த பெண் போராளிகளின் உடல்கள் மீது சீருடையில் உள்ள படையினர் பாலியல் ரீதியான கொடுமைகளை புரிவதை வெளிப்படுத்துகிறது.
இந்தக் காட்சிகளை பிரித்தானிய தமிழர் பேரவை தமக்கு வழங்கியுள்ளதாக சனல் - 4 தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் இதுதொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,
இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் சமகி அமைப்பினால் கண்காட்சியொன்று நடாத்தப்பட்டது.
இக் கண்காட்சியில் இறுதிகட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்பட்ட மனித உரிமைகள் தொடர்பாக காணொளிகள் சிலவும் காண்பிக்கப்பட்டுள்ளன. பொது நலவாய மாநாட்டுக்கு வருகை தந்திருந்த சனல் 4 தொலைகாட்சியின் கெலும் மெக்ரே உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
எனவே தற்போது சனல் 4வினால் வெளியிடப்பட்டுள்ள காணொளிக்கும் சிறிகொத்தாவில் காண்பிக்கப்பட்ட காணொளிக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் முதலில் ஆராய வேண்டும்.
இதேவேளை சனல்4 காணொளி தொடர்பில் இராஜதந்திரி ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire