jeudi 27 mars 2014

யாழ்ப்பாணம் அதன் பாரம்பரிய பொரிச்ச கோழியை கைவிட்டு கே.எப்.சி - நோயல் நடேசன்

யாழ்ப்பாணத்தில் போர் தீவிரமடைந்த காரணத்தால் முன்னர் நாங்கள் KFC--in-Jaffna-3வாழ்ந்த எங்கள் பழைய யாழ்ப்பாணத்தை திரும்பவும் அடைவது தவிர்க்க முடியாதது என்பது எங்களுக்கு தெரியும். யுத்தம் நடந்த வருடங்களில்கூட மிக நுட்பமான முறையில் புதிய யாழ்ப்பாணம் ஒன்று உருவாகும் அடையாளங்கள் இருக்கத்தான் செய்தன. கடந்த 5 வருடங்களில் நான் யாழ்ப்பாணத்துக்கு 13 தடவைகள் சென்றுள்ளேன். ஆனால் கடந்த 2014 ஜனவரியில்     சென்றபோது யாழ்ப்பாணத்தில் நான் கண்ட சர்வதேச அடையாளங்களை விட சிறந்த முக்கியமான மாற்றங்கள் எதையும் முன்னர் கண்டதில்லை.
முதல்முறையாக யாழ்ப்பாணத்தின் இதயப் பகுதியில் சர்வதேச அடையாளங்களில் ஒன்றை நான் கண்டேன். அது கென்டக்கி பிரைட் சிக்கனின் தாடிவைத்த கேணலின் முகம் ஆகும். யாழ்ப்பாணம் அதன் பாரம்பரிய பொரிச்ச கோழியை கைவிட்டு கே.எப்.சி (KFC) க்குள் நுழைவது மாற்றத்துக்கான ஒரு மாபெரும் பாய்ச்சல் என்றே சொல்லலாம். எனக்கு அது எங்கள் மக்கள் வெற்றிலை போடும் பழக்கத்தை கைவிட்டு சுயிங்கம் மெல்லுவதைப் போல இருந்தது. எனக்கு அந்த மாற்றம் யாழ்ப்பாணம் கடந்தகால நிலப்பிரபுத்துவ ஆட்சியை உடைத்துக்கொண்டு கடைசியாக  21ம் நூற்றாண்டுக்குள் நுழைவதன் இறுதிச் சின்னமாகத் தோன்றியது.
காலநிலை மாற்றம் பற்றி பேசப்படுவதை ஸ்ரீலங்காவில் அனுபவப்படுவதைப் போல வேறு இடத்தில் ஒருவரால் உணர முடியாது. நாங்கள் வடக்கிலிருந்து தெற்கிற்கும் கிழக்கிலிருந்து மேற்குக்குமான சகல இடங்களுக்கும் பயணம் செய்தோம். அது புலன்களால் அறியக்கூடிய ஒரு மாற்றம் அதை உங்களால் காணவும் மற்றும் உணரவும் முடியும். வீதிகள் மட்டுமல்ல,ஆனால் அணுகும்முறை மற்றும் புதிய உற்சாகம் அங்குள்ள மக்களின் முகங்களில் தென்பட்டது.
ஒரு பிரகாசமான மாலைவேளையில் முக்கியமாக கொழும்பில் தமிழர்களின் மேலாதிக்கத்தின் கீழுள்ள புறநகரான வெள்ளவத்தையின் குறுகிய வீதி ஒன்றினுடாக எனது மனைவியடன் நடந்து செல்லுகையில் கிளிநொச்சியில் வசிக்கும் ஒரு இளம் விதவையின்  கைபேசி அழைப்பு ஒன்று வந்தது. கடந்த மூன்று வருடங்களாக அவளுக்கு நான் அனுசரணை வழங்கி வருகிறேன். நான் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் வழியில் அவளைச் சந்திக்க எண்ணியிருந்தேன். உள்ளுர் பாடசாலை ஒன்றில் அவள் தொண்டராசிரியராக பணியாற்றிக் கொண்டிருப்பதால் கிளிநொச்சியில் வைத்து எங்களை சந்திக்க முடியாமல் இருப்பதையிட்டு வருத்தம் தெரிவிக்கவே அவள் எனக்கு கைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்தாள். அவளது முன்னேற்றத்தை அறிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே ஏற்பட்டது, அவளைப்போன்ற போரில்; தங்கள் கணவனை இழந்த மற்றும் 12 விதவைகள் இதேபோல முன்னேறியிருப்பதை முன்னேற்றத்துக்கான பொதுவான ஒரு அடையாளமாக நான் கருதினேன். கடந்த மூன்று வருடங்களாக அவர்களுக்கு நான் உதவி செய்து வந்தேன்.
என்னுடன் பேசிய விதவையின் பெயர் லட்சுமி. அவளுக்கு 10 வயதுக்கு குறைந்த இரண்டு பிள்ளைகள் உள்ளனர். போர் முடிவடைந்து ஒரு வருடத்தின் பின்னர் அரசாங்க உதவியுடன் மீண்டும் கட்டப்பட்ட ஒரு வீட்டில் வைத்து அவளைச் சந்தித்தேன், ஆனால் அந்த வீட்டுக்கு கதவுகள் எதுவும் இருக்கவில்லை. அதற்கு கதவுகள் பொருததுவதற்கு அவளிடம் பணம் எதுவும் இல்லை அல்லாமலும் எதிர்காலத்தில் கிடைக்ககூடிய நிதியுதவி எதையும் அவளால் எதிர்பார்க்கவும் முடியவில்லை. ஒரு உள்ளுர் நண்பரின் உந்துதலால் அவளது குடும்பத்துக்கு சில உதவிகளை ஏற்பாடுசெய்ய என்னால் இயலுமாக இருந்தது மற்றும் தற்பொது உள்ளுர் நிலமைகள் முன்னேற்றமடைந்துள்ளதை அறிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
2009 மார்ச்சில்  அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை சேர்ந்த உதவும் மனப்பாங்குள்ள 25 வெளிநாட்டு நண்பர்களுடன் நான் கொழும்புக்குச் சென்றிருந்தேன். யுத்தம் ஒரு உச்சக்கட்ட நிலைக்கு வந்திருந்த ஒரு நெருக்கடியான நேரம் அது. எங்களது முக்கிய இலக்கு எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களின் பாதுகாப்புக்காக மனிதக் கேடயங்களாக எல்.ரீ.ரீ.ஈ அழைத்துச் சென்றிருந்த தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தின் மூலம் உதவி செய்விப்பது என்பதாகும். எங்களது தூது முயற்சி எல்.ரீ.ரீ.ஈ யின் பிடிவாதம் மற்றும் தடைகள் காரணமாக தோல்வியடைந்தாலும்கூட, அரசாங்கத்தின் சில முக்கிய அதிகாரிகளுடன் நாங்கள் இரண்டு நாட்களாக பேச்சு வார்த்தைகளை நடத்தினோம். அந்த நேர அரசியலில்; நாங்கள் தொடர்புபடவில்லை. யுத்தத்துக்கு பின்னான அரசாங்கத்தின் புனர்வாழ்வு முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வந்தோம், அதாவது  தொடர்ந்து அகதி முகாம்களுக்குச் செல்வது மற்றும் எங்கள் அவதானிப்புகளை முன்னேற்றம் ஏற்படுத்துவதற்காக அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பது போன்ற பணிகளில் நாங்கள் தொடர்புபட்டிருந்தோம்.
அங்கு பல முக்கியமான காரணிகளை பதிவு செய்ய வேண்டியிருந்தது. எல்.ரீ.ரீ.ஈ யினால் மேற்கொள்ளப்பட்டு வந்த முப்பது வருட பயங்கரவாதம் மற்றும் வன்முறைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஒரு முடிவுக்கு கொண்டுவந்திருந்தார். நாங்கள் அவரை விரும்புகிறோமோ அல்லது இல்லையோ இந்தகடினமான உண்மையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஒரு போரின் முடிவு ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளும் தருணம், அது புதிய சாத்தியங்களுக்கான வழியை திறந்து வைக்கிறது. இது ஒரு சாமான்ய சாதனை அல்ல. போரை நடத்துவதைப் போலவே போரை முடித்து வைப்பதும் கடினமானது. பிரபாகரனின் வீணான யுத்தத்துக்காக நிதி வழங்கிய தமிழ் புலம்பெயர்ந்தோர், வேறு மார்க்கங்களில் அதை தொடர்வதற்கு முடிவு செய்தார்கள். அவர்கள் யுத்தப்பாதையை வெளிநாட்டில் இருந்து தொடர்ந்தார்கள். பாதுகாப்பான கரைகளில் இருந்துகொண்டு போராட அவர்கள் முடிவு செய்தார்கள்.
எல்.ரீ.ரீ.ஈ சர்வதேச சட்டங்களை மீறுவதற்கு நிதியுதவிகளை வழங்கிய பின்னர்,இரவோடிரவாக அவர்கள் மனித உரிமை பாதுகாவலர்களாக மாறிவிட்டார்கள். மற்ற எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தாலும் கூட இந்தப் போரில்தான் எங்கள் விடுதலை வீரர்கள் அதிகளவு தமிழர்களை கொன்றார்கள்.
பிரபாகரன் மற்றும் அவரது விடுதலை வீரர்களின் இந்த பயனற்ற யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள  துன்பங்கள்,மரணங்கள், மற்றும் அழிவுகளை கருத்தில் கொள்ளும்போது, அதை தொடர முயலும் புலம்பெயர்ந்தோரின் முயற்சிகள் எல்லாம் யுத்தத்தில் வீணடிக்கப்பட்டதை போல பயனற்ற முயற்சிகள் என்பதில் மாற்றம் எதுவும் இல்லை. நாங்கள் முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் நாங்கள் வெற்றிகொண்டுள்ள சமாதானத்தை நாங்கள் அங்கீகரிக்க வேண்டும். அரசியல் எனும் மேகம் இந்தப் பிரச்சினைகளை மறைத்து விட்டதால் மோசமான கடந்த காலம் சுலபமாக எங்களால் மறக்கப்பட்டு விட்டது.
எல்.ரீ.ரீ.ஈ ஒரு சிறிய அமைப்பு அல்ல. இந்திய அமைதிப்படையினரை ஸ்ரீலங்காவை விட்டு பலவந்தமாக அனுப்பியபோது, உலகின் நான்காவத பெரிய இராணுவத்தை தாங்கள் தோற்கடித்து விட்டதாக அது மார்தட்டிக் கொண்டது. எல்.ரீ.ரீ.ஈயானது, தான், இராணுவம்,கடற்படை,மற்றும் வான்படை என்பனவற்றை கொண்ட ஒரு அரசாங்கம் என்று கூறி ஸ்ரீலங்கா அரசாங்கத்தை அச்சுறுத்தியது மட்டுமன்றி இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியைக்கூட கொன்றது. ஆனால் இறுதியில் அவர்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். போரின் கடைசி நாட்களில் தங்களுக்கு தோல்வி தவிர்க்க முடியாதது என உணர்ந்த எல்.ரீ.ரீ.ஈ, ஒரு சர்வதேச கூப்பாட்டை எழுப்பும் நம்பிக்கையில் 400,000 தமிழ் பொதுமக்களின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டது. நிராயுதபாணியான பொதுமக்களின் பின்னால் மறைப்பு தேடுவது ஒரு வெட்கக்கேடான நடவடிக்கை, தங்களை வீரர்கள் என அழைத்துக் கொள்பவர்களுக்கு அது மதிப்பான ஒரு செயல் அல்ல. அது ஒரு அவமானகரமான செய்கை. விடுதலை வீரர்கள் சயனைட் வில்லைகளைக் கொடுத்து இளைஞர்களை மூளைச்சலவை செய்துவிட்டு தாங்கள் பொதுமக்கள் பின்னால் மறைப்பு தேடிக்கொண்டார்கள். தங்களிடமிருந்து தப்பியோடிய தமிழர்களை அவர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். அதற்கு மேலதிகமாக தாங்கள் கைப்பற்றிய இராணுவ வீரர்கள் அனைவரையும் அவர்கள் கொன்றார்கள். ஸ்ரீலங்கா இராணுவம் எல்.ரீ.ரீ.ஈ யை தோற்கடித்தது மட்டுமன்றி அவர்கள் பிடித்து வைத்திருந்த மக்களையும் மீட்டார்கள்.இடம்பெயர்ந்த மக்களில் 95 விகிதமானவர்கள் மூன்று வருடத்துக்குள்ளேயே மீள் குடியேற்றப்பட்டதுடன் வட மாகாணத்தில் உட்கட்டமைப்பு வசதிகளும் மீளக் கட்டியெழுப்ப பட்டது. கிட்;டத்தட்ட 95 விகிதமான செயற்பாட்டிலிருந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் ஒன்றிணைக்கப் பட்டார்கள்.
சில பகுதிகளில் இன்னமும் திருத்த வேலைகளைச் செய்வதற்கான தேவைகள் உள்ளன என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன், மற்றும் சமூகங்களிடையேயான நல்லிணக்க நடவடிக்கைளை அவை விரைவு படுத்தும். ஆனால் எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளார்கள். இதற்கான முழுப் பழியும் எல்.ரீ.ரீ.ஈ யினையே சாரும், கடந்த முப்பது வருடங்களில் அவர்கள் அரசியல் தலைவர்களை மட்டும் அழிக்கவில்லை. முக்கியமான சமூகத் தலைவர்களையும் கொன்றொழித்து விட்டார்கள்.
எங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு புதிய தலைமை,அவர் புதிய சFoodcity1மிக்ஞையான யாழ்ப்பாணத்தில் உள்ள கே.எப்.சி யினை படிப்பதன் மூலம் காலத்துக்கு ஏற்ப மாறுபவராக இருக்கவேண்டும். மோதல் அரசியலுக்கு திரும்புவது பழையபடி வளைந்து நெளிந்து திரும்பவும் எங்களை அரசியல் கொந்தளிப்புக்கே இட்டுச்செல்லும். எங்களுக்கு தேவை வடக்கு மற்றும் கிழக்கில்,  போரினால் கீறிக் கிழிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் தேடித்தரும் நடைமுறைக்கு ஏற்ற தலைமைத்துவமே. எங்கள் மக்கள் வாழ்நாள் முழுவதும் அரசியல் பட்டினி கிடக்க முடியாது. துயரத்தின் ஆழத்திலிருந்து எங்கள் தலைகளை உயர்த்துவதற்கு எங்களுக்கு பொருளாதாரம் தேவை. தற்போதைக்கு நாங்கள் அரசியலை சற்று ஒத்தி வைப்போம். அரசியலால் நாங்கள் இரத்தம் சிந்துவதற்கே நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளோம். பொருளாhரத்தின் மூலம் கடந்த 30 வருடங்களாக பயனற்ற அரசியல் காரணமாக நாங்கள் இழந்த யாவற்றையும் திரும்பப் பெற்று முன்னோக்கி நடைபோட முடியும்.
எங்கள் முன்னாலுள்ள தெரிவு மிகவும் சுலபமானது: அரசியலா அல்லது பொருளாதாரமா என்பதுதான் அது. நாங்கள் அரசியலை தேர்வு செய்தால் நாங்கள் இழந்த ஈழத்துக்கே நாங்கள் திரும்பிச் செல்வேண்டியிருக்கும். பொருளாதாரத்தை தேர்ந்தெடுத்தால், மே 2009ல் நாங்கள் இழந்த அனைத்iயும் எதிர்காலத்தில் திரும்ப பெறுவதற்கான ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்கும். வரலாற்று உதாரணங்கள் இதை நியாயப்படுத்துகின்றன. உதாரணத்துக்கு ஜேர்மனியர்களின் விடயத்தை எடுத்துக்கொண்டால், போரில் தோல்வியடைந்த பின்னர் அவர்கள் ஹிட்லரின் பாசிச அரசியலுக்கு திரும்பியிருந்தால் இன்று இருப்பதைப்போல ஜேர்மனி இருந்திருக்குமா? ஏனெனில் ஜேர்மனியர்கள்  அவர்களது அரசியலை என்றென்றைக்குமாக குழி தோண்டி புதைத்து விட்டு, நடைமுறைக்கேற்றபடி பொருளாதாரத்தை தேர்ந்தெடுத்தபடியால் தோல்வியின் சாம்பல் மேடடிலிருந்து அவர்களால் உச்சிக்கு உயர முடிந்தது.
ஜேர்மனியர்களும் மற்றும் யப்பானியர்களும் பயனற்ற யுத்தங்களால் தாங்கள் இழந்த யாவற்றையும் திரும்பவும் வெற்றி கொண்டார்கள். நாங்கள் எங்கள் அரசியலை சரியான பாதைக்கு திருப்பினால் எங்களால் அவர்களைவிட அதிகம் செய்துகாட்ட முடியும்.              மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Aucun commentaire:

Enregistrer un commentaire