jeudi 16 mai 2013

2012 ஆம் ஆண்டில் மாத்திரம் 7.45 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்

சுவிட்ஸர்லாந்தில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து இலங்கை உட்பட்ட நாடுகளின் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஆயிரத்து 500 இற்கும் அதிகமான  சம்பவங்கள் வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியாகியுள்ளது.
குறிப்பாக 2012 ஆம் ஆண்டில் மாத்திரம் 7.45 மில்லியன் டொலர்கள் இந்த வகையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.சுவிட்ஸர்லாந்தில் இருந்து ரஸ்யா, இலங்கை, அமெரிக்கா,போன்ற நாடுகளுக்கு இந்த பணத்தொகைகள் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறையினர் அறிந்துள்ளனர். எனினும் இதில் ஏற்கனவே பயங்கரவாத பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்கள் எவரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தேசங்களிலிருந்து உறவுகளுக்கு அனுப்பப்படும் பணக்கொடுக்கல் வாங்கல்களை இலக்கு வைத்தே இந்த செய்தியை சிங்கள ஊடகங்கள் திரிபு படுத்தி வெளியிட்டுள்ளன.

Aucun commentaire:

Enregistrer un commentaire