vendredi 10 mai 2013

புலிகளின் முன்னாள் அரசியல்துறைத் தலைவி தமிழினி கொழும்பு நீதிமன்றத்தில்


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைத் தலைவி தமிழினி எனப்படும் சுப்ரமணியம் சிவகாமிக்கு எதிரான வழக்கில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழினிக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு நீதிமன்றில் நடைபெற்றது.
2009ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதி வவுனியா முகாம் ஒன்றில் தமிழினியை புலனாய்வுப் பிரிவினர் முகாம் ஒன்றில் வைத்து கைது செய்திருந்தனர்.
அவசரகாலச் சட்டத்தின் அடிப்படையில் தமிழினியை கைது செய்து நீண்ட காலம் தடுத்து வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாகவும் நேற்று புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரையில் எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி வரையில் தமிழினியை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மாவட்ட பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்

Aucun commentaire:

Enregistrer un commentaire