jeudi 16 mai 2013

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளுடன் போதைவஸ்து கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபர்கள்

thangathuraiகொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுடன் போதைவஸ்துக் குற்றச்சாட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதனால் போதைவஸ்துக் குற்றச்சாட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள சிங்களக் கைதிகளை வேறு பிரிவுக்கு மாற்றுமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1983 ஆம் ஆண்டு ஜூலை இனப்படுகொலையின் போது அரசியல் கைதிகளான தங்கத்துரை குட்டிமணி போன்றவர்கள் சிறைகளில் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்படுவதற்கு முன்னதாக சிங்கள கிரிமினல் கைதிகளின் சிறைகளுக்கு அவர்கள் மாற்றப்பட்டனர்.
இவ்விடயம் குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான எம்.குமரகுருபரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மகசின் சிறைச்சாலையின் அத்தியட்சகர் எமில் ரஞ்சனுடன் குமரகுருபரன் உரையாடியுள்ளார்.
கைதிகளைத் தமிழ், சிங்களம் என நாம் வேறுபடுத்த முடியாது. கைதிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்படுமென்று மகசின் சிறைச்சாலை அத்தியட்சகர் உறுதியளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire