jeudi 9 mai 2013

ஆச்சிரமத்தில் 15 வயதுச் சிறுமியை கை, கால்கள் கட்டிய பின் கடும் பாலியல் வல்லுறவு

ஆச்சிரமம் என்னும் பெயரில் சிறுவர்களை வைத்து பாலியல் வல்லுறவுகள் நடைபெறுவது தமிழர்பகுதியில் அதிகரித்துக் காணப்படுகின்றது. கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் 15 வயதுச் சிறுமியை கை, கால்கள் கட்டிய பின் கடும் பாலியல் வல்லுறவு செய்துள்ளார் ஆச்சிரமத்து ஆசிரியர்.

15 வயசு சிறுமி கை கால் கட்டப்பட்டநிலையில் மலசலகூடத் திற்குள்வைத்து அங்கு ஆசியராக பணிபுரிந்த குடும்பஸ்தர் ஒருவரால் மிகவும் மிருகத்தனமாக பாலியல் பலாத் காரத்திற்கு உட்படுத்தப் பட்டதோடு மனநோயாளி என்று முத்திரை குத்தி தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளாள்.
.
இந்த கொடூரசம்பவத்திற்கு ஆசிரம நிர்வாகமும் உடந்தையாகயிருந்துள்ளதாவும் அதிகாரிகள் தரப்பில் குற்றம் கூறப்படுகிறது .

சுமார் 2 மாதங்களுக்கு முன்பாக இடம்பெற்ற மேற்படிச் சம்பவம் ஆசிரம நிர்வாகத்தினராலும் வடமாகாண சிறுவர்விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளாலும் மறைக்கப்பட்டு இருந்தது.

முன்னாள் கிளிநொச்சி அரசாங்க அதிபர் இராசநாயகத்தின் தலைமையில் நடக்கும் இந்தக் கொடூரச் செயல்களை மறைக்கும் முயற்சியில் சில அரச உயர் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கோடிக்கணக்கான நிதி மோசடிகளும் அங்கு நடைபெற்றுள்ளது.

பல சிறுமிகள் இவ் ஆச்சிரமத்தில் நடக்கும் பாலியல் தொல்லைகளில் இருந்து தப்புவதற்காக ஆச்சிரமத்தை விட்டு ஓடுவதாகவும் இவ்வாறு ஓடுபவர்களை ஆச்சிரமத்து நிர்வாகம் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கு பெருமளவு பணத்தை லஞ்சமாகக் கொடுத்து அச் சிறுவர்களைப் பிடித்து மீண்டும் ஆச்சிரமத்தில் கொண்டு வந்து கட்டி வைத்து தாக்குவதாகவும் தெரியவருகின்றது. வெளிநாட்டுத் தமிழர்கள் கொண்டு வந்து நன்கொடையாகக் கொடுக்கும் பணத்தினை தங்களது சொந்த வைப்பில் அங்குள்ளவர்கள் போட்டு வைப்பதாகத் தெரியவருகின்றது.

சிறுமிகள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவுகளுடன் பல அரச உயரதிகாரிகளும் சம்மந்தப்பட்டுள்ளனர்.

பனை வளர்த்துக் கள்ளுக் குடிக்கும் செயற்பாடுகளில் ஆச்சிரமத்தை வைத்து நடாத்துபவர்கள் ஈடுபடுவதை தடுப்பதற்கு நீதிமன்றங்களும் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகளும் மனச் சுத்தமாக ஈடுபடுவது அவசியம்

Aucun commentaire:

Enregistrer un commentaire