jeudi 23 mai 2013

இந்திய-அமெரிக்க பெண் இளம் விஞ்ஞானி என்ற விருது.

p.chargeகலிபோர்ணியாவைச் சேர்ந்த இஷா கரே என்ற 18வயது பெண் இந்த கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இதற்காக இன்ரெல் அறக்கட்டளை  இவருக்கு இளம் விஞ்ஞானி என்ற விருதை வழங்கியுள்ளது.
இவர் கண்டுபிடித்த இச்சிறு சாதனம் கைத்தொலைபேசி பற்றறிக்குள் அடங்கக்கூடியதென்றும் 20-30 செக்கன்டுக்குள் சார்ஜ் செய்ய உதவுமென்றும் கூறப்படுகின்றது.
இதற்காக அமெரிக்க அரசினால் 50,000 அமெரிக்கன் டொலர்களும் பரிசாக கிடைத்துள்ளது. இவரது கண்டுபிடிப்பை கூகுள் நிறுவனமும் பாராட்டியுள்ளது.
தனது கைத்தொலைபேசி அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதே இக்கண்டு பிடிப்பிற்கு தன்னைத் தூண்டியதாக இஷா கூறியுள்ளார்.
1000 முறை பயன் படுத்தக் கூடிய பற்றறிகளைப் போலல்லாது தன்னுடைய கருவி மூலம் 10,000 தடவை சார்ஜ் செய்ய பயன் படுத்தலாமென இஷா கூறியுள்ளார்.
இச்சாதனம் மின்விளக்குகளில் பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாகவும் அதன்படி கைத்தொலைபேசி மற்றும் பல மின்சாதனப் பொருட்களிலும் இதன் பயன்பாடு வெற்றிகரமாக இருக்குமெனவும் கூறப்படுகின்றது.

Aucun commentaire:

Enregistrer un commentaire