vendredi 31 mai 2013

அமெரிக்காவில் வசிக்கும் 3 இந்தியர்கள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

சாதனையாளர் விருதுஅமெரிக்காவில் குடியேறி பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் வெளிநாட்டினரை பாராட்டும் விதமாக ‘புதிய மாற்றத்தை உருவாக்கிய சாதனையாளர்’ (சாம்பியன் ஆப் சேஞ்ச்) என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தற்போது 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் இவர்கள் 11 பேரும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
3 பேர் இந்தியர்கள்

இவர்களில் சாரதா அகர்வால் (சிகாகோ), ரித்ஹிமான் தாஸ் (கன்சாஸ்), அமர் சவானி (மசாஷூசெட்ஸ்) ஆகிய 3 பேரும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆவார்கள். இந்த விருது பெற்ற 3 இந்தியர்கள் உள்பட அனைவரும் வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் அமெரிக்காவின் முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டவர்கள் என்று அமெரிக்க அரசாங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க தொழில்நுட்ப தலைமை அதிகாரி தோட்பார்க் கூறும்போது, ‘அமெரிக்க சமுதாயத்துக்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொருளாதாரம் வளர்ச்சி ஆகியவை மேம்பட உழைத்த இவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பதில் பெருமை கொள்கிறோம்’ என குறிப்பிட்டார்.
விருது பெற்ற இந்தியரான சாரதா அகர்வால் சிகோகாவில் ஹெல்த்கேர் மீடியா நிறுவனம் மூலம் உதவி புரிகிறார். அத்துடன் ஆராய்ச்சி, மாநாட்டு பேச்சாளர், ஆலோசகர் போன்ற பணிகளிலும் சிறப்பாக ஈடுபாடு வைத்துள்ளார். ரித்ஹிமான் தாஸ் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப துறையிலும், அமர் சவானி உலக அளவில் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு மருத்துவ சேவை கிடைக்க உதவிகள் புரிந்தும் சாதனை படைத்துள்ளார்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire