jeudi 16 mai 2013

லெனின் நினைவிடம் திறக்கப்பட்டது


உடல் வைக்கப்பட்டுள்ள நினைவிடம் இதுவரையில்லாத அளவுக்கு பெரிய அளவில் மீள் சீரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.செஞ்சதுக்கத்தில் உள்ள கிரனைட் சமாதியின் அடித்தளத்தில் நீர் கசிந்தமையால் பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது அடித்தளத்தில் கான்கிரீட் கலவை செலுத்தப்பட்டு அது பலப்படுத்தப்பட்டுள்ளது.ரஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கி நடத்திய லெனின் 1924 இல் இறந்தார். அதன் பிறகு அவரின் உடல் பாடம் செய்யப்பட்டது.
கடந்த 1930ம் ஆண்டில் இருந்து அவரின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் லெனினின் உடலை அங்கிருந்த அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் அதை புதைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் அங்கே அடிக்கடி எழுந்து வருகின்றன.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் லெனினின் உடல் செஞ்சதுக்கத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire