lundi 13 mai 2013

ரயில் சேவை ஆரம்பமாக வுள்ளது. அநுராதபுரத் திலிருந்து மடு வரை

மடு  திருத்தலத்துக்கான ரயில் சேவை நாளை மறுதினம் ஆரம்பமாக வுள்ளது. முதலாவது ரயில் அநுராதபுரத் திலிருந்து மடுத்திருந்தலம் வரை அன்றைய தினம் காலை 9.00 மணிக்குப்புறப் படவுள்ளது.
இந்தமுதலாவது ரயிலில் பொது மக்களுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ- போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம பிரதியமைச்சர் றோஹன திசாநாயக்க ஆகியோருடன் இந்திய முன்னாள் உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவும் மடுத்திருத்தலம் வரை பயணிக்கவுள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மதவாச்சியிலிருந்து மடுவரைக்குமான ரயில்பாதை புனரமைக்கப்பட்டுள்ளது. 43 கிலோ மீற்றர் நீளமான இந்த ரயில் பாதையை மீள நிர்மாணிப்பதற்காக இந்திய நிறுவனமொன்று 81.3 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கம் இத்திட்டத்துக்காக 1223.5 மில்லி யன் ரூபா நிதியை செலவிட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.
இம்முறை மடுத்திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இது பெரும் வரப்பிரசாரமாக அமையும். அதேவேளை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மடு- தலைமன்னார் ரயில் சேவையும் ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire