lundi 27 mai 2013

பெண்களுக்கு அனுமதி!மேலாடைஇன்றி நியோர்க்கில் நடமாட

நியூயோர்க் நகரில் மேலாடை அணியாமல் நடமாடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் மேலாடை அணியாமல் சுற்றுப்பயணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹோல்லி வேன் வோஸ்ட், நியூயோர்க் நகரிலும் தனக்கே உரிய பாணியில் சுற்றி வந்த போது மேலாடை அணியாதது குற்றம் என பொலிஸார் அவரை கைது செய்த நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

பல மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் நியூயோர்க் நீதிமன்றம், முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் மேலாடை இல்லாமல் பெண்கள் பொது இடங்களில் நடமாடுவதை குற்றம் என்று கூற முடியாது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்து உத்தரவிடுகிறேன் என்று சமீபத்தில் தீர்ப்பளித்தது. 

இதனையடுத்து, நியூயோர்க் நகரில் பணியாற்றும் 34,000 பொலிஸாருக்கு நகர பொலிஸ் தலைமையகம் நேற்று முன்தினம் விடுத்துள்ள அவசர உத்தரவில் பெண்கள் மேலாடை இன்றி திரிவது குற்றம் அல்ல. எனவே, இந்த குற்றப்பிரிவின் கீழ் யாரையும் கைது செய்ய வேண்டாம் என உத்தரவை பிறப்பித்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire