mercredi 29 mai 2013

ஈழவர் இடர் தீர புரட்சிப் போராளியான ஐபிரி IPT

இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைக்காக அவர்களின் உரிமை-உடைமைகளை வென்றெடுப்பதற்கான புரட்சிப்பாதையில் 'நாம் ஈழவர் நமது மொழி தமிழ் நம்நாடு ஈழம்" என்ற பதாகையின் கீழ் 'மன்னார் முதல் மட்டக்களப்பு வரை பருத்தித்துறை முதல் பதுளை வரை பொத்துவில் உள்ளடங்கிய பிரதேசத்தில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு - ஒரு சமத்துவ-சமதர்ம-சோசலிஸ ஈழத்தை அமைப்போம்" என்ற இலட்சியத்தை நோக்கிய புரட்சிப் போராட்டத்தில், ';இன்னுயிர் ஈந்தும் ஈழம் அமைத்திட ஏற்றவர் நாம் உண்டு" எனப் புறப்பட்டுக்களமிறங்கிப், போர் விழுது பெற்றவன் இந்த ஐபிரி( IPT ). வளம்மிகு வன்னி மண் தந்த வைரம் இவன். ஈழப்போராட்டப் பாதையில் இவன் ஒரு மைல் கல். ஈழப் புரட்சி வரலாற்றில் ஐபிரி ( IPT ) ஒரு முன்னுதாரணம். ஈழத்தில் இவன் நடக்காத தேசம் இல்லை-அவன் கால் பதிக்காத கிராமமும் இல்லை. தோழர்கள் நெஞ்சங்களில் நிறைந்து ஈழவர் இதயங்களில் பதிந்தவன். இன்று அவன் எம்மத்தியில் இல்லை. ஆனால் என்றும் அவன் எம்முடன வாழ்வான்.

ஈழவர் குரல்
பிரான்ஸ்

Aucun commentaire:

Enregistrer un commentaire