vendredi 28 février 2014

குண்டு வெடித்து ஈராக்கில் 35 பேர் பலி

ஈராக்கில் இருந்து கடந்த 2008–ம் ஆண்டு அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டது. அதை தொடர்ந்து அங்கு தினசரி வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பாக்தாத் அருகேயுள்ள சதர் சிட்டி மாவட்டத்தில் பழைய மோட்டார் சைக்கிள்களை விற்கும் மார்க்கெட் உள்ளது. நேற்று அங்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 25 பேர் அதே இடத்தில் பலியாகினர். 45 பேர் காயம் அடைந்தனர்.மேலும், சதர்சிட்டியில் ஒரு மினிபஸ்சில் குண்டு வெடித்தது. அதில் பஸ்சில் பயணம் செய்த 5 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயம் அடைந்தனர்.
இவை தவிர வடக்கு ஷாப் பகுதியில் மற்றொரு மினி பஸ்சில் குண்டு வெடித்தது. அதில் 5 பேர் பலியாகினர். 11 பேர் காயம் அடைந்தனர். இந்த 3 சம்பவங்களிலும் மொத்தம் 35 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயம் அடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்க வில்லை. ஆனால் சன்னிபிரிவு தீவிரவாதிகள் இத்தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire