vendredi 28 février 2014

கூகுள் கண்ணாடி அணிந்து புதுப் படத்தை ரிக்கார்ட் செய்ய முயற்சி? பாய்ந்து வந்தது போலீஸ்!!

`தலைவர்’ படத்தையும் ரிக்கார்ட் பண்ணுமா இது?
`தலைவர்’ படத்தையும் ரிக்கார்ட் பண்ணுமா இது?
கம்ப்யூட்டர் கண்ணாடி (computer-in-eyeglass) என கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள கூகுள் கண்ணாடியை அணிந்து சென்ற ஒருவரை, சந்தேகத்தின் பெயரில் விசாரித்துள்ளனர் அமெரிக்க போலீஸ் அதிகாரிகள். அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள சினிமா தியேட்டரில் நடந்தது, இந்த சம்பவம்.
சினிமா தியேட்டருக்கு கூகுள் கண்ணாடி அணிந்து செல்வது குற்றமா? அப்படியெல்லாம் கிடையாது. ஆனால், கூகுள் கண்ணாடியில், எதிரே தெரிவதை ரிக்கார்டிங் செய்யும் வசதி உள்ளது. இதனால், கண்ணாடி அணிந்து வந்த நபர், தியேட்டரில் இருந்தபடி திரைப்படத்தை ரிக்கார்ட் செய்கிறாரோ என்ற சந்தேகம், தியேட்டர்காரர்களுக்கு ஏற்பட்டதில், அவர்கள் போலீஸூக்கு தகவல் தெரிவித்துவிட்டார்கள்.
கொலம்பஸ் நகரில் உள்ள ஏ.டிம்.சி. தியேட்டரில், இந்த வாரம் ரிலீஸான புதிய ஆங்கிலப்படம் Jack Ryan: Shadow Recruit பார்த்துக்கொண்டிருந்த நபரே, கூகுள் கண்ணாடி அணிந்திருந்தார்.
தகவல் அறிந்து பாய்ந்து வந்த ஓஹியோ போலீஸ் இந்த நபரை விசாரித்தபோது, அவர் தாம் அணிந்திருந்த கூகுள் கண்ணாடி வெறும் கம்யூட்டர் கண்ணாடி மட்டுமல்ல, தூரப்பார்வை குறைபாட்டுக்காக அணியும் பிரிஸ்கிரிப்ஷன் கண்ணாடியும்கூட என்று தெரிவித்தார். அத்துடன் அவரது கூகுள் கண்டாடியில் ரிக்கார்டிங் செய்யும் வசதியும், டீஅக்டிவேட் செய்யப்பட்டுள்ளதையும் காட்டினார்.
இதையடுத்து வெறும் கையுடன் திரும்பிச் சென்றது ஓஹியோ போலீஸ்.
இதுகுறித்து காவல்துறை செய்தி தொடர்பாளர் காலித் வால்ஸ் கருத்து தெரிவிக்கையில், “கூகுள் கண்ணாடி அணிந்திருந்தவர், தாமாகவே முன்வந்து தகவல் தெரிவித்தாரே தவிர, அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை” என்றார். கண்ணாடி அணிந்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை                                                          நன்றி விறுவிறுப்பு

Aucun commentaire:

Enregistrer un commentaire