dimanche 9 février 2014

புலிகள் எமது அரசியல் தலைவர்களை கொன்றமையை மன்னிக்க முடியாது

நாங்களே எங்களுடைய அரசியல் தலைமைகளைக் கொலை செய்தமையினாலேயே என்னைப் போன்ற ஓய்வுபெற்றவர்களும் அரசியலுக்குள் வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் நாங்களே எங்களுடைய அரசியல் தலைமைகளைக் கொன்றமை மன்னிக்க முடியாத குற்றமாகும் எனவும் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். அண்மையில் மானிப்பாய் பிரதேச சபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “எங்களுடைய இனம் போரினால் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. எம்மில் புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்களில் பலர் இன்று புத்திஜீவிகளாகத் திகழ்கின்றனர். ஆனால் போரினால் மிகவும் பாதிப்படைந்துள்ள நாம் இன்று எமது கல்வியைத் தொலைத்தவர்களாக பின்னிலையிலுள்ளோம். புலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்கள் கல்வியில் மிகவும் சிறந்து விளங்குகின்ற பொழுது இங்கிருக்கின்ற எம்மவர் மட்டும் கல்வியைத் தொலைத்தவர்களாக இருக்கின்றமைக்கு நாம் வாழ்ந்த சூழலே காரணமாக அமைந்துள்ளது. இதேவேளை எமது அரசியல் தலைமைகளை நாங்களே கொலை செய்தமையினாலும் நாம் நீண்டதொரு வெற்றிடத்தினை எதிர்கொண்டு வருகின்றோம். எமது தலைமைகளை நாங்களே கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும் என முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.விக்கினேஸ்வரன்  சம்மந்தன் போன்றோர் புலிகள் அமைப்பை நேரடியாக சாடாமல் மறைமுகமான சாடலையே அன்மைக்கலமாக பெசிவருகின்றார்கள் என்பதை அரசியள் அவதானிகள் கருதுகின்றார்கள்

Aucun commentaire:

Enregistrer un commentaire