mardi 18 février 2014

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களால் பல்வேறு பிரச்சினை

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

மேலும் இதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இதனைவிட அண்மையில் குருணாகலில் உயிரிழந்த பாடசாலை மாணவியின் விவகாரம் பேஸ்புக் சமூக வலைத்தளத்தால் ஏற்பட்ட பிரச்சினையாகும். எனவே பெற்றோர் இவ்விடயத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டுமென அவர் தெரிவித்தார். 

ஒருவர் தனது புகைப் படம் அல்லது தகவல்களைப் வெளியிடும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவே இவ்வாறான பேஸ்புக் போன்ற சமூக வலைத்தலங்களால் நாட்டினுள் ஏதேனும் மோசடிகள் நடைபெற்றால் குற்றத்தடுப்பு பிரிவால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் வெளிநாடுகளிலிருந்து ஏதேனும் மோசடிகள் நடைபெறுமானால் அதனை தடுப்பது கஷ்டமான விடயம் எனவும் அவர் தெரிவித்தர்.


எனவே சமூக வலைத்தளங்களை பாவிப்பவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire