mercredi 5 février 2014

இனந்தெரியாதோரது தர்ம அடி யாழில்.

இலங்கையின் தேசியக்கொடியினை ஏற்றி வைத்த தமிழ் மகனொருவர் இனந்தெரியாதோரது தர்ம அடியினால் படுகாயமடைந்து யாழ்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளார்.அராலியை சேர்ந்த தம்பிப்பிள்ளை மகேந்திராசா-வயது 56 என்பவரே தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலங்கையின் 66 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தனது வர்த்தக நிலையம் முன்பதாக குறித்த நபர் சிங்கக்கொடியினை ஏற்றி வைத்துள்ளார்.அவ்வேளை அங்கு சென்ற  முகத்தினை மூடி தலைக்கவசமணிந்த நபர்கள் சிலர் அவர் மீது சகட்டுமேனிக்கு தாக்கியுள்ளனர். இனிமேல் சிங்கக்கொடியை தொட்டுக்கூட பார்க்கமாட்டோமென அவரது குடும்பத்தவர்கள் அழுது குழறியதையடுத்தே தாக்குதலாளிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். வெளியேறும் போது இலங்கைக்கொடியினை தூக்கி வீசிவிட்டு சென்றுமுள்ளனர்.சம்பவத்தையறிந்து அங்கு வந்த படையினர் வீதி சோதனைகளில் ஈடுபட்டனர்.தாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Aucun commentaire:

Enregistrer un commentaire