vendredi 14 février 2014

இந்தியாவினால் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க முடியாது. இலங்கையின் இறையாண்மை, சுயாதீனத்தன்மை ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும்;சுஜாத்தா சிங்

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்களை ஆராய்ந்த பின்னர் இந்தியாவின் நிலைப்பாடு வெளியிடப்படும் என இந்திய வெளிவிவகார செயலாளர் சுஜாத்தா சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திய வெளிவிவகா அமைச்சில் சந்தித்த இலங்கையின் ஊடகவியலாளர்கள் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை சம்பந்தமாக கொண்டு வரப்பட உள்ள பிரேரணை தொடர்பில் எதனையும் அனுமானித்து கூற முடியாது. 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் இலங்கையின் தேசிய நல்லிணக்கத்திற்கு முக்கியமானது.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்ற எந்த யோசனைகளையும் இந்தியா முன்வைக்கவில்லை. 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கம் என்பது இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது.
இவ்வாறான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை செயற்படுத்துமாறு இந்தியாவினால் அழுத்தங்களை கொடுக்க முடியாது. இலங்கையின் இறையாண்மை, சுயாதீனத்தன்மை ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என்றும் சுஜாத்தா சிங் குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire