mardi 11 février 2014

மனித உரிமை அமைப்புக்கள் வழக்குத் தாக்கல்.முன்னாள் சீன ஜனாதிபதியை கைது செய்யுமாறு ஸ்பெய்ன் நீதவான் உத்தரவு

முன்னாள் சீன ஜனாதிபதியை கைது செய்யுமாறு ஸ்பெய்ன் நீதவான் உத்தரவுமுன்னாள் சீன ஜனாதிபதியை கைது செய்யுமாறு ஸ்பெய்ன் நீதவான் ஒருவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஸீமின்( ( Jiang Zemin) உள்ளிட்ட ஐந்து உயர் சீன அதிகாரிகளை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.சீன ஜனாதிபதியை கைது செய்வதற்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென நீதவான் கோரியுள்ளார்.

திபெத்தில் இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டதாக சீன ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்பெய்னின் உயர் நீதிமன்ற நீதவான் இஸ்மேல் மொரினொ (Ismael Moreno)  இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.முன்னாள் சீன ஜனாதிபதிக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவினை பிறப்பிக்குமாறு நீதவான் மொரினொ, இன்டர்போல் காவல்துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இனச் சுத்திகரிப்பு, மனிதாபிமானத்திற்கு எதிரான வன்முறைகள், சித்திரவதைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.ஸ்பெய்ன் நாட்டு மனித உரிமை அமைப்புக்கள், அந்நாட்டு உயர் நீதிமன்றில் முன்னாள் சீன ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தன.திபெத் மக்கள் மீது சித்திரவதைகளை மேற்கொண்ட நபர்களை ஜனாதிபதி ஸீமின் வழிநடத்தினார் என நீதவான் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஏனெனில், குற்றமிழைத்த அனைவரினதும் உயர் அதிகாரியாக கட்டுப்பாட்டாளராக ஜனாதிபதி ஸீமின் கடமையாற்றினார் என தெரிவித்துள்ளார்.சுயாட்சி அதிகாரங்களை கோரி கிளர்ச்சியில் ஈடுபட்ட திபெத்தியர்களை கைது செய்து நீண்ட காலத்திற்கு தடுத்து வைத்து சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சீனப் பிரதமருக்கு மேலதிகமாக அந்நாட்டின் அப்போதைய பிரதமர் லீ பெங்( Li Peng), முன்னாள் குடும்பக் கட்டுப்பாட்டு அமைச்சர், காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் ஜனாதிபதியுடன் இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஸ்பெய்னில் சில வழக்குகளில் வெளிநாட்டில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க நீதவான்களுக்கு அதிகாரம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது,. இதன் அடிப்படையிலேயே முன்னாள் சீன ஜனாதிபதிக்கு எதிராக ஸ்பெய்ன் உயர் நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பெய்னில் இவ்வாறான தீர்ப்புக்கள் வழங்கப்படுவதனை சில நாடுகள் எதிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சர்வதேச நீதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை வரையறுப்பது குறித்த உத்தேச சட்ட மூலமொன்றும் ஸ்பெய்னில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire