mardi 11 février 2014

கடுவெல அதிவேக நெடுஞ்சாலை அடுத்த மாதம் திறக்கப்படும்!

கொட்டாவ – கடுவெல அதிவேக நெடுஞ்சாலை அடுத்த மாதமளவில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 11 கிலோ மீற்றர் தூரம் கொண்ட கொட்டாவ-கடுவெல அதிவேக நெடுசாலையின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து வருகின்ற நிலையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் ஆலோசனையுடன் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் உள்நாட்டு பொறியியலாளர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக நிர்மாணிக்கப்படும் இவ்வீதியில் மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம் என நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொட்டாவ – கடுவெல அதிவேக நெடுஞ்சாலையில் அமைந்து 3.3 கிலோமீட்டர் நீளமுடைய மகாவௌ பாலம் இலங்கையின் மிகப்பெரிய பாலம் மற்றும் மே;பாலமாக அமைய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேல்மாகணத்திலிருந்து நாளொன்றுக்கு மில்லியன் கணக்கானோர் கொழும்பு நகருக்கு பயணிக்கின்றனர். இதனால் தினந்தோறும் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இதனைக்கு குறைக்கும் முகமாக இப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire